பெண்களுக்கு தெரியாமல் ஆபாச வீடியோ எடுத்து வலைதளங்களுக்கு விற்பனை செய்த பேருந்து நடத்துநரை போலீசார் கைது செய்தனர்.
மும்பை, விக்ரம்கேட் பகுதியைச் சேர்ந்தவர் மிலிந்த் ஜேட்(32). இவர் தானே நகராட்சி போக்குவரத்தில் பேருந்து நடத்துநராக பணியாற்றி வருகிறார். இவர் தனது மனைவியின் தோழிகள் இருவரிடம் அரசு வேலை வாங்கித்தருவதாகக் கூறி திருமணத்தை மீறிய உறவு வைத்திருந்ததாக கூறப்படுகிறது. அந்த பெண்களுடன் ஒன்றாக இருந்தபோது, அவர்களுக்கு தெரியாமல் அதை வீடியோ எடுத்து மிலிந்த் ஜேட் ஆபாச வலைதளங்களுக்கு விற்பனை செய்ததாக தெரிகிறது.
இதையடுத்து பாதிக்கப்பட்ட இரண்டு பெண்களும் போலீசில் கடந்த ஜூலை மாதம் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வந்தனர்.
இந்நிலையில் தற்போது மிலிந்த் ஜேட்டை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும், ஆபாச இணையதளத்தில் பதிவேற்றப்பட்ட 62 ஆபாச கிளிப்களையும் போலீசார் மீட்டுள்ளனர். போலீசார் நடத்திய விசாரணையில் வீடியோக்களை ஆபாச வலைத்தளங்களில் விற்பனை செய்வதன் மூலம் 2019 ஜூன் முதல் நவம்பர் வரை ரூ .5 லட்சம் சம்பாதித்ததாக மிலிந்த் ஜேட் வாக்குமூலம் அளித்துள்ளார்.
இதுகுறித்து போலீசார் கூறுகையில், “மேலும் பாதிக்கப்பட்டவர்கள் யாரேனும் இருந்தால் அவர்களை கண்டறியும் முயற்சியில் இறங்கியுள்ளோம். வீடியோவில் மற்ற பெண்களின் முகம் தெரியாத வகையில் மிலிந்த் ஜேட் படம் பிடித்துள்ளார். பாதிக்கப்பட்ட பெண்ணின் வீடியோ ஆபாச வலைதளங்களில் வலம் வருவதை அவரின் உறவினர் பார்த்து கூறியுள்ளார். அதன்பிறகே இச்சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது. பின்னரே அந்த பெண் போலீசில் புகார் அளித்தார்.
ஜேட் தனது மனைவியை பார்க்க வருவதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். அவர் மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தனர்.
Loading More post
திண்டுக்கல்: ஆசிரியைக்கு கொரோனா தொற்று உறுதியானதால் மூடப்பட்ட அரசுப் பள்ளி
கிரிக்கெட் வீரர் நடராஜனுக்கு கொரோனா இல்லை
மு.க.ஸ்டாலினுக்கு திருத்தணி முருகன் கோயிலில் பூஜை செய்த வெள்ளி வேல் பரிசு
சசிகலாவை தொடர்ந்து இளவரசிக்கும் கொரோனா தொற்று உறுதி
நடராஜன் உள்ளிட்ட 6 இளம் வீரர்களுக்கு 'தார்' கார் பரிசு - ஆனந்த் மஹிந்திரா
மசினக்குடியும்... ரிசார்ட்டுகளும்! அங்கு நடப்பது என்ன? ஆபத்து யாருக்கு?
அமெரிக்க அதிபர் பைடனின் தொடக்க உரையை செதுக்கிய இந்தியர்... யார் இந்த வினய் ரெட்டி?!
'Is Love Enough? Sir' - காதலில் காசு ஒரு பொருட்டே இல்லைன்னு யார் சார் சொன்னது?!
இந்தியக் குடும்பங்களில் சுரண்டப்படும் பெண்களின் உழைப்பு - ‘தி கிரேட் இண்டியன் கிச்சன்’