பீகாரில் வெற்றி பெற்று ஆட்சியமைத்தால் கொரோனா தடுப்பூசி இலவசம் என பாஜக வாக்குறுதி அளித்துள்ளது.
பீகார் சட்டப்பேரவைத் தேர்தல் 3 கட்டமாக நடைபெற உள்ளது. இதற்கான பரப்புரை நடவடிக்கையில் அரசியல் கட்சிகள் இறங்கியுள்ளன. இந்நிலையில் பாஜக சார்பில் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இந்த தேர்தல் அறிக்கையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டார்.
அதில், “பீகாரில் பாஜக தலைமையிலான கூட்டணி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் கொரோனா தடுப்பூசி இலவசம். பீகாரில் நகர், கிராமங்களில் 2022க்குள் சுமார் 30 லட்சம் மக்களுக்கு வீடுகள் கட்டி கொடுக்கப்படும். மருத்துவம், பொறியியல் படிப்புகள் இந்தி மொழியில் கற்பிக்கப்படும். கூடுதலாக மாநிலத்தில் ஆசிரியர்களை நியமிப்பது, சுகாதாரப்பணியாளர்களுக்கு தேவையான வசதிகளை செய்து தருவது, வேலைவாய்ப்புகளை உருவாக்குவது” போன்ற பல வாக்குறுதிகள் அடங்கியுள்ளன.
முன்னதாக, காங்கிரஸ் கூட்டணி வெளியிட்டிருந்த அறிக்கையில், “விவசாயக்கடன் தள்ளுபடி, வேளாண் சட்டங்கள் நிராகரிப்பு, முதியவர் பெண்களுக்கு கவுரவ ஓய்வூதியம்” போன்ற முக்கிய அம்சங்களை தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Loading More post
சட்டப்பேரவைத் தேர்தல்: சமத்துவ மக்கள் கட்சி - ஐஜேகே கூட்டணி அமைத்து போட்டி
மீண்டும் ஒரு 2011... வாக்குப்பதிவு முடிந்து கிட்டத்தட்ட 1 மாதத்திற்குப் பின் ரிசல்ட்!
கொரோனா காலத்தில் 5 மாநிலத் தேர்தல்கள்: 3 புதிய நடைமுறைகள் அறிவிப்பு!
தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தை விதிமுறைகள் என்னென்ன? - முக்கிய அம்சங்கள்
தமிழகத்தில் வாக்குப்பதிவு ஏப்.6... வாக்கு எண்ணிக்கை மே 2...- எதற்காக இந்த இடைவெளி?
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தை விதிமுறைகள் என்னென்ன? - முக்கிய அம்சங்கள்
PT Web Explainer: இணைய சுதந்திரத்தின் கழுத்தை நெரிக்கிறதா சமூக ஊடக நெறிமுறைகள்?
விளையாட்டு மைதானங்கள் இனி தனியாருக்கு குத்தகை? - மத்திய அரசின் 'வருவாய்' திட்டம்!
என்னமோ எதிர்பார்த்தோம்.. என்னென்னமோ நடந்து முடிஞ்சிருச்சு! அகமதாபாத் டெஸ்ட் 'Twists'