தமிழகத்தில் தியேட்டர்கள் எப்போது திறக்கப்படும்? அமைச்சர் கடம்பூர் ராஜூ விளக்கம்

When-do-theaters-open--Minister-Kadampur-Raju-informed-that-the-decision-will-be-taken-soon

தமிழகம் முழுவதும் சினிமா தியேட்டர்களைத் திறப்பது பற்றி விரைவில் முதல்வர் முடிவு செய்வார் என தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர்.செ.ராஜூ தெரிவித்துள்ளார்.


Advertisement

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "திரையரங்குகள் திறப்பது பற்றிய மத்திய அரசு வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து முதல்வருடன் ஆலோசனை நடத்தியுள்ளோம். மேலும், துறைரீதியாக ஆய்வு செய்துவருகிறோம். ஊரடங்கு காலத்திலும் திரைப்படத்துறையினருக்கு அரசு சில தளர்வுகளை வழங்கியுள்ளது" என்றார்.

image


Advertisement

மேலும் பேசிய அமைச்சர் கடம்பூர் ராஜூ, "மத்திய அரசு வழிகாட்டு நெறிமுறைகள்தான் வெளியிட்டுள்ளதே தவிர, கட்டயமாக திரையரங்குகளைத் திறக்கச் சொல்லவில்லை. இருப்பினும் திரையரங்கு உரிமையாளர் கோரிக்கை, தொழிலாளர்களின் நலன் கருதி ஆலோசனை செய்து விரைவில் திரையரங்குகளைத் திறப்பது பற்றி முடிவு எடுக்கப்படும் என முதல்வர் தெரிவித்துள்ளதாகக் கூறினார்.

சின்ன வயசு ஆசையை ஊரடங்கில் நிறைவேற்றிய கல்லூரி மாணவி.!

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement