வெங்காயம் எங்க விளையும்னாவது ராகுல் காந்திக்கு தெரியுமா? : ம.பி முதல்வர் காட்டம்

Rahul-Gandhi-does-not-know-a-thing-about-farming--MP-Chief-Minister-Shivraj-Singh-Chouhan

ராகுல் காந்திக்கு வெங்காயம் நிலத்துக்கு கீழே விளையுமா அல்லது நிலத்துக்கு மேலே விளையுமா என்றுகூட தெரியாது என்று மத்திய பிரதேச முதல்வர் சிவ்ராஜ்சிங் சவுகான் விமர்சித்துள்ளார்.


Advertisement

image

மத்திய அரசு இயற்றியுள்ள மூன்று வேளாண் சட்ட மசோதாக்களுக்கு எதிராக காங்கிரஸ் நாடுமுழுவதும் கடும் போராட்டங்களை முன்னெடுத்து வருகிறது.


Advertisement

இதுபற்றி பேசிய மத்திய பிரதேச முதல்வர் சிவ்ராஜ்சிங் சவுகான் “ ராகுல்காந்திக்கு விவசாயம் பற்றி எதுவும் தெரியாது. வெங்காயம் மண்ணுக்கு கீழே விளையுமா அல்லது மண்ணுக்கு மேலே விளையுமா என்பது பற்றிகூட அவருக்கு தெரியாது. அவர் டிராக்டரின் சோபாமேல் உட்கார்ந்துகொண்டு சுற்றிக்கொண்டிருக்கிறார்” என்று கூறியுள்ளார்

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement