தேயிலை தோட்டத்தில் வேலை செய்த புதுமண தம்பதி தூக்கிட்டு தற்கொலை...!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

(கோப்பு புகைப்படம்)


Advertisement

உதகை அருகே சோலூர் பகுதியில் தேயிலைத் தோட்டத்தில் வேலை செய்து வந்த புதுமணத் தம்பதியினர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பாக கோட்டாட்சியர் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. 

image


Advertisement

உதகை அருகே மேலூர் ஒசஹட்டி பகுதியைச் சேர்ந்தவர் தயானந்தன் (31). இவரது மனைவி வினோதினி (22). இவர்களுக்கு கடந்த மே மாதத்தில்தான் திருமணம் நடைபெற்றுள்ளது. புதுமண தம்பதிகளான இவர்கள் இருவரும் உதகை அருகே சோலூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் தேயிலைத் தோட்டத்தில் வேலை செய்ததோடு அந்த தோட்ட நிறுவனத்தின் குடியிருப்பிலேயே வசித்து வந்தனர். 

image  
இந்நிலையில் காலையில் தயானந்தனின் வீட்டின் கதவு திறக்கப்படாமல் இருந்ததைக் கண்டு சந்தேகமடைந்து சக ஊழியர்கள் கதவைத் தட்டியுள்ளனர். ஆனால், கதவு திறக்கப்படவில்லை. இதையடுத்து, வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது இருவரும் தூக்கிட்டு உயிரிழந்திருப்பதைக் கண்டு எஸ்டேட் நிர்வாகத்துக்குத் தகவல் தெரிவித்துள்ளனர். 

image  


Advertisement


தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த புதுமந்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதனைத்தொடர்ந்து இருவரின் உடல்களையும் கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக உதகை அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். உயிரிழந்த தம்பதியின் இறப்புக்கான காரணம் என்னவென்று தெரியவில்லை என்று காவல்துறையினர் தெரிவித்தனர். தற்கொலை செய்து கொண்டவர்களுக்கு திருமணமாகி 6 மாதங்கள்கூட முடிவடையாததால், தற்கொலை தொடர்பாக கோட்டாட்சியர் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

loading...

Advertisement

Advertisement

Advertisement