இங்கிலாந்தைச் சேர்ந்த பிளாண்ட் இன்டர்நேஷனல் என்ற அமைப்பு இந்தியா உட்பட 22 நாடுகளில் நடத்திய ஆய்வில் 58 சதவீதம் இளம் பெண்கள் சமூக வலைதளங்கள் மூலம் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி இருக்கிறது.
’உலக பெண்கள் அறிக்கை நிலை’ என்ற தலைப்பில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வு இந்தியா, பிரேசில், நைஜீரியா,ஸ்பெயின், ஆஸ்திரேலியா, ஜப்பான், தாய்லாந்து, அமெரிக்கா உள்ளிட்ட 22 நாடுகளில் எடுக்கப்பட்டது. அக்டோபர் 11 ஆம் தேதி சர்வதேச பெண் குழந்தைகள் தினம். அதனால், இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
சமூக வலைதளங்களான ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், ட்விட்டர், வாட்ஸஅப், டிக்டாக் போன்ற பல்வேறு தளங்களில் ஆன்லைன் துன்புறுத்தலை எதிர்கொண்டதை பெண்கள் ஏற்றுக்கொண்டதாக ஆய்வு தெரிவிக்கிறது. ஐரோப்பாவில் மட்டுமே 63 சதவீதம் பெண்கள் துன்புறுத்துதல்களை பதிவு செய்துள்ளனர். லத்தின் அமெரிக்காவில் 60 சதவீதமும், ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் 58 சதவீதமும், வட அமெரிக்காவில் 52 சதவீத பெண்கள் என்றும் மேலும் ஆய்வு குறிப்பிடுகிறது.
இதில், பாலியல் வன்முறை அச்சுறுத்துதல்கள், இனவெறிக் கருத்துகள், ஆன்லைனில் திட்டுவது போன்றவையும் அடங்கும். குறிப்பாக, 47 சதவீதம் இளம் பெண்கள் பாலியல் வன்முறைக்கு ஆளாகியுள்ளனர். இதில், தன்பால் ஈர்ப்பாளர்கள் அதிகம்பேர் என்பது குறிப்பிடத்தக்கது.
Loading More post
குடல் இறக்க அறுவை சிகிச்சை முடிந்து முதல்வர் பழனிசாமி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ்!
முக்கியச் செய்திகள்: அச்சுறுத்தும் கொரோனா 2-ம் அலை முதல் சென்னை அணியின் வெற்றி வரை
தடுப்பூசி குறித்த சர்ச்சை கருத்து - மன்சூர் அலிகான் மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு
6 லட்சம் கோவிஷீல்டு தடுப்பு மருந்துகள் இன்று சென்னை வருகை!
ஜடேஜா -மொயின் அலி அசத்தல் பந்துவீச்சு! ராஜஸ்தானை 45 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது சென்னை!
மேக்ஸ்வெல் வரவு - தொடர் வெற்றி : பெங்களூர் அணியின் ‘ஈ சாலா கப் நம்தே’ கனவு பலிக்குமா?
கொரோனா 2-ம் அலையின் மோசமான பாதிப்பை இந்தியா தடுக்கத் தவறியது எப்படி? - ஒரு பார்வை
தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு பலன் தருமா? - ஒரு பார்வை
'தயவுசெய்து, முகக்கவசம் அணிவீர்’- உலுக்கும் தகவலுடன் இன்ஸ்டா பதிவில் மருத்துவர் வேண்டுகோள்