திமுக எம்பி கனிமொழி கைது: போலீஸ் வாகனத்தை மறித்து திமுகவினர் போராட்டம்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

ஹத்ராஸ் பெண்ணுக்கு நீதி கேட்டு நடைபெற்ற போராட்டத்தில் திமுக எம்.பி கனிமொழி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


Advertisement

ஹத்ராஸ் பெண் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டதற்கு நியாயம் கேட்டு திமுக மகளிர் அணியினர் சென்னையில் மெழுகுவர்த்தி ஏந்தி பேரணியில் ஈடுபட்டனர். இந்த பேரணி சின்னமலையில் இருந்து கிண்டி ராஜ்பவன் ஆளுநர் மாளிகை வரை நடைபெறுவதாக இருந்தது. இந்த பேரணியை திமுக தலைவர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

image


Advertisement

இதையடுத்து திமுக எம்.பி கனிமொழி முன்னிலையில் மெழுகுவர்த்தி ஏந்தி செல்லும் பேரணி தொடங்கியது. ஆனால் போலீஸ் தடையை மீறி பேரணி நடத்தியதாக கனிமொழி உள்ளிட்டோரை போலீசார் கைது செய்து வாகனத்தில் ஏற்றினர். ஆனால் திமுகவினர் போலீஸ் வாகனத்தை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதைத்தொடர்ந்து கனிமொழி கீழே இறங்கி வந்து அனைவரையும் கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தி விட்டு மீண்டும் வாகனத்தில் ஏறினார்.

loading...

Advertisement

Advertisement

Advertisement