அரிவாளால் கேக்வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய இளைஞர்களால் பரபரப்பு...!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

சாயல்குடி அருகே அரிவாளால் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடிய இளைஞர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.


Advertisement

image

ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே அரிவாளால் பிறந்த நாள் கேக் வெட்டி கொண்டாடிய இளைஞர்களின் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருவதால் அவர்கள் மீது காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர். 


Advertisement

 

image 


சாயல்குடி அருகே நரிப்பையூர் காமராஜ்புரத்தை சேர்ந்த முனீஸ்குமார், விஜயபாரதி ஆகியோர் நண்பர்களுடன் சேர்ந்து பிறந்தநாள் கொண்டாட திட்டமிட்டுள்ளனர். இதையடுத்து முனீஸ்குமார் பிறந்தநாளை கொண்டாடுவதற்காக அவருடைய நண்பர்கள் விஜயபாரதி உள்ளிட்ட ஏராளமானோர் ஒன்றாக சேர்ந்து நள்ளிரவில் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் பிறந்த நாள் கேக்கை வெட்டி உற்சாகமாக கொண்டாடி உள்ளனர்.


Advertisement

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருவதால் அவர்கள் மீது காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்

loading...

Advertisement

Advertisement

Advertisement