மும்பையில் அதிகரித்து வரும் கோவிட்-19 நோய்த்தொற்று காரணமாக மும்பை மாநகராட்சி 671 கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் உள்ள 10,000 க்கும் மேற்பட்ட கட்டடங்களுக்கு சீல் வைத்துள்ளது.
மகாராஷ்டிராவில் அதிகரித்து வரும் கோவிட்-19 நோய்த்தொற்று காரணமாக, நோய் பரவலை தடுக்க பிரஹன் மும்பை மாநகராட்சி (பி.எம்.சி) 671 கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் 10,000 க்கும் மேற்பட்ட கட்டடங்களுக்கு சீல் வைத்துள்ளது. பி.எம்.சி வெளியிட்டுள்ள தரவுகளின்படி, போரிவாலி, அந்தேரி மற்றும் பாண்டூப் ஆகியவை சீல் வைக்கப்பட்ட பகுதிகளில் பெரும்பகுதியைக் கொண்டுள்ளன. அதேபோல தஹிசார், மலாட் மற்றும் கண்டிவாலி ஆகிய இடங்களில் அமைந்துள்ள பெரும்பாலான கட்டடங்கள் கட்டுப்படுத்தப்பட்ட அல்லது சிவப்பு மண்டலங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன.
மகாராஷ்டிரா மாநிலத்தில் இதுவரை 13,39,232 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர், 35,571 பேர் பலியாகியுள்ளனர். நேற்று மொத்தமாக 13,565 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்தனர். இதன் மூலம் மாநிலத்தில் கொரோனாவிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 10,30,015 ஆக உள்ளது. தற்போது மாநிலத்தில் 2,73,228 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
மும்பை நகரம் மற்றும் அதன் செயற்கைக்கோள் நகரங்களை உள்ளடக்கிய மும்பை பெருநகர மண்டலத்தில் (எம்.எம்.ஆர்) நேற்று 4,876 புதிய நோய்த்தொற்றுகள் மற்றும் 81 இறப்புகள் பதிவானது. இந்த பிராந்தியத்தில் மொத்தமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,67,614 மற்றும் இறப்பு எண்ணிக்கை 15,466 ஐ எட்டியுள்ளது. மும்பை நகரில் மட்டும் நேற்று 2,261 புதிய நோய்த்தொற்றுகளும், 44 இறப்புகளும் பதிவாகியுள்ளன. இப்பகுதியில் மொத்தமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,98,846 ஆகவும், இறப்பு எண்ணிக்கை 8,794 ஆகவும் உள்ளது. மகாராஷ்டிராவில் தற்போது குணமடைந்தோர் விகிதம் 76.91 சதவீதமாகவும், இறப்பு விகிதம் 2.66 சதவீதமாகவும் உள்ளது.
Loading More post
மார்ச் 10-ல் வெளியாகிறது திமுக வேட்பாளர்கள் பட்டியல் : மு.க.ஸ்டாலின் தகவல்
3 முறை சக்தி வாய்ந்த நிலநடுக்கங்கள்; நியூசிலாந்தில் சுனாமி எச்சரிக்கை விடுப்பு
"சுப்மன் கில் சரியாக விளையாட முடியாததற்கு இதுதான் காரணம்"-சுனில் கவாஸ்கர்
துருக்கியில் ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் 9 வீரர்கள் உயிரிழப்பு
தமிழகத்தில் ராகுல் பரப்புரைக்கு தடை கேட்கும் பாஜக
நிர்பந்தமா, நிதானமா? - சசிகலா விலகல் எழுப்பும் கேள்விகளும் பின்னணியும்!
புதுச்சேரியில் 9, 10, 11 தேர்வு சாத்தியமா?... குழப்பத்தில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள்!
முரண்டு பிடிக்கும் திமுக தலைமை; அதிருப்தியில் கூட்டணி கட்சிகள் - இழுபறியில் பேச்சுவார்த்தை
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை