ரோஜா பூவில் படுத்திருக்கும் அரிதான நீலநிறப் பாம்பு: ஆச்சர்யப்படுத்தும் வைரல் வீடியோ

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

ரோஜா ஒன்றின் மீது நீல நிறப்பாம்பு ஒன்று படுத்திருக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


Advertisement

பாம்பு என்றாலே பொதுவாக பழுப்பு, பிரவுன், மஞ்சள், கருப்பு, ஆரஞ்ச், வெள்ளை, சிவப்பு, சிமெண்ட் நிறங்களில்தான் பெரும்பாலும் இருக்கும். இதில், விதிவிலக்காக ’பச்சை பாம்புகள்’ மட்டும் முழு பச்சைக் கலரில் காட்சியளித்து ஈர்த்தாலும் கண்ணை கொத்திவிடும் என நினைத்து, எல்லோருமே பயப்படுவார்கள். பாம்புகள் எந்தக் கலரில் இருந்தாலும் மனிதர்களுக்கு பயத்தை ஏற்படுத்துபவைதான். ஏனென்றால், ’பாம்பு என்றால் படையே நடுங்கும்’ என்பார்கள்.

 image


Advertisement

பாம்புக்கு பயப்படமாட்டேன் என்று துணிச்சலோடு பல வருடங்களாக லாவகமாக பாம்பு பிடித்தவர்களே பாம்பு கடிப்பட்டு இறந்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. கடலூரில் பாம்பு பிடித்து வந்த பூனம் சந்த் ஒரு வீட்டில் புகுந்த பாம்பை பிடிக்கச் சென்றபோது பாம்பு கடித்து உயிரிழந்த சம்பவமே, இதற்கு உதாரணம்.

image

பூனம் சந்த்


Advertisement

எந்த நிறத்தில் இருந்தாலும் அப்படியொரு அபாயகரமானவை பாம்புகள். இந்நிலையில், அழகான சிவப்பு ரோஜா பூ மீது கண்ணைப் பறிக்கும் நீலநிறப் பாம்பு ஒன்று படுத்திருக்கும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில் நீல நிறப்பாம்பை பார்த்துவிட்டு பொம்மைப் பாம்போ என்று நாம் சிந்திக்க துவங்குவதற்குள் தனது நாக்கை நீட்டி ‘நான் உயிருள்ள பாம்புதான்’ என்று நிரூபிப்பதுபோல் நாக்கை அசைத்துக் காட்டுகிறது அந்தப் பாம்பு. பயமாக இருந்தாலும் பாம்பின் நீலநிறம் பார்ப்பதற்கு கொள்ளை அழகாக காட்சியளிக்கிறது.

loading...

Advertisement

Advertisement

Advertisement