‘நாங்கள் தயாராக உள்ளோம்’ மும்பை கேப்டன் ரோகித் ஷர்மா

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

மும்பையும் சென்னையும் இந்த சீசனுக்கான முதல் போட்டியில் விளையாடி  வரும் சூழலில் ‘அனைத்திற்கும் நாங்கள் தயாராக உள்ளோம்’ என போட்டி ஆரம்பிப்பதற்கு முன்னர் சொல்லியுள்ளார் மும்பை கேப்டன் ரோகித். 


Advertisement

image

“கடந்த சில வாரங்களாக துபாயில் தங்கி இருப்பதால் இங்குள்ள ஆடுகளங்களின் கண்டீஷனை நன்றாக தெரிந்து கொண்டுள்ளோம்.  இங்கு வருவதற்கு முன்னர் தொடருக்கு தயாராகும் வகையில் மும்பையில் முகாமிட்டிருந்தோம். அபுதாபியிலும் சிறப்பான முறையில் பயிற்சிகளை மேற்கொள்ள முடிந்தது. 


Advertisement

நாங்கள் பயிற்சி மேற்கொண்ட பிட்ச்சிற்கும் போட்டியில் விளையாட உள்ள பிட்ச்சிற்கும் பெரிய அளவில் வித்தியாசம் இருக்காது என நினைக்கிறேன். 

image

நாங்கள் மேற்கொண்ட பயிற்சியின் பலனை எங்கள் ஆட்டத்தின் மூலம் வெளிப்படுத்தி அறுவடை செய்ய .உள்ளோம். கடந்த இரண்டு ஆண்டுகளாக எங்கள் அணி சிறப்பாக தான்  செயல்பட்டு வருகிறது. 


Advertisement

டிகாக், பொல்லார்ட், பட்டின்சன், போல்ட் இந்த போட்டியில் ஆட உள்ளனர்” என போட்டி ஆரம்பிப்பதற்கு முன்னர் சொல்லியுள்ளார் ரோகித் ஷர்மா.

loading...

Advertisement

Advertisement

Advertisement