"எனக்கு கொரோனா"- மனைவியிடம் பொய் சொல்லிவிட்டு காதலியுடன் காணாமல்போன இளைஞர்..!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருப்பதாக  மனைவியிடம் கூறிவிட்டு ஜூலை மாதம் காணாமல்போன மும்பையைச் சேர்ந்த 28 வயது ஆண் தனது காதலியுடன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.


Advertisement

image

(கோப்பு புகைப்படம்)


Advertisement

அந்த நபர் ஜூலை 24 அன்று தனது மனைவிக்கு போன் செய்து  " நான் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளேன், என்னால் இனி வாழ முடியாது." என்றார். இதனால் குழப்பமான மனைவி மேலும் கேள்விகளைக் கேட்கும் முன், அழைப்பைத் துண்டித்தார். பின்னர்  அந்த பெண்  தனது சகோதரரை உதவிக்காக அழைத்தார், அவர்  போலீஸை அணுகி காணாமல் போனவரின் பற்றிய புகாரை பதிவு செய்தார்.

அதன்பின் அந்த நபரின் பைக், ஹெல்மெட், பை மற்றும் சாவிகள், வாஷியின் பிரிவு 17 இல் உள்ள ஒரு சாலையில் காணப்பட்டன. இருப்பினும், அவர் இருக்கும் இடம் குறித்து போலீசாருக்கு எந்த தகவலும் கிடைக்கவில்லை. புகார் அளிக்கப்பட்ட பின்னர் விசாரணை தொடங்கப்பட்டதாக ஏ.சி.பி விநாயக் வாட்ஸ் தெரிவித்துள்ளார். அருகிலுள்ள பகுதிகளிலிருந்து பாதுகாப்பு கேமரா காட்சிகள் சரிபார்க்கப்பட்டன, மேலும் அவரது மொபைல் இருப்பிடத்தையும் போலீசார் கண்டுபிடிக்க முயன்றனர்.

விசாரணையை தீவிரப்படுத்தியபோது, அவருக்கு  இன்னொரு பெண்ணுடன் தொடர்பு உள்ள விவகாரம் குறித்து போலீசாருக்கு தெரிய வந்தது. ஒரு மாத கால தேடலுக்குப் பிறகு, அவர் இந்தூரில் இருப்பது போலீசாருக்குத் தெரியவந்துள்ளது. பின்னர் ஒரு போலீஸ்  குழுவை வாஷி  காவல்துறை அதிகாரி சஞ்சீவ் துமால் இந்தூருக்கு  அனுப்பி விசாரித்தபோது, காணாமல் போனவர் இறுதியாக தனது காதலியுடன் கண்டுபிடிக்கப்பட்டார். செப்டம்பர் 15 ஆம் தேதி அவர்  மீண்டும் மும்பைக்கு அழைத்து வரப்பட்டார்.


Advertisement

 

loading...

Advertisement

Advertisement

Advertisement