செல்போனில் விளையாடியதால் கண்டித்த பெற்றோர்? கல்லூரி மாணவி தற்கொலை

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

அம்பத்தூர் அருகே போனில் விளையாடியதை பெற்றோர் கண்டித்ததால் கல்லூரி மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது.


Advertisement

சென்னை அம்பத்தூர், வரதராஜபுரம் பழைய எம்.டி.எச் சாலை அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர் ஸ்ரீதர். இவரது மகள் பத்மாவதி. இவர், அண்ணாநகரில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் 2ம் ஆண்டு படித்து வந்தார். தேர்வு நெருங்கும் நேரத்தில் பத்மாவதி படிக்காமல் நீண்ட நேரமாக போனில் விளையாடி வந்ததாக கூறப்படுகிறது. இதைப்பார்த்த பெற்றோர் அவரை கண்டித்ததாக தெரிகிறது.

image


Advertisement

வரதட்சணை கொடுமை; காதல் மனைவியின் ஆபாச புகைப்படத்தை ஃபேஸ்புக்கில் பதிவிட்ட கணவர்!

இதனால் மனமுடைந்த பத்மாவதி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இதனை பார்த்த பெற்றோர் அவரை மீட்டு கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

image

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே பத்மாவதி இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.


Advertisement

தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல. மனித உயிரை மாய்த்துக்கொள்வதற்கான உரிமை யாருக்கும் இல்லை. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே சினேகா போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சேவை ஆற்றி வருகின்றன. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.

சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,
சென்னை - 600 028.
தொலைபேசி எண் - +91 44 2464 0050, +91 44 2464 0060

loading...

Advertisement

Advertisement

Advertisement