மழைக்காலம் வந்தாலே வீட்டில் தண்ணீர், மண் மற்றும் அழுக்குகள் எளிதில் தேங்கிவிடும். குறிப்பாக வாசற்படி தாழ்வாக இருக்கும் வீடுகளில் மழைநீர் எளிதில் சென்றுவிடும். இதனால் அது சிமெண்ட், மொசேக், டைல்ஸ், மரம் என எந்த வகையான தரையாக இருந்தாலும் எளிதில் அழுக்காகிவிடும். மேலும் மழைக்காலத்தில் நோய்க்கிருமிகளும் எளிதில் தாக்கும். தரை சுத்தமாக இல்லாவிட்டால் கிருமிகள் வீட்டிற்குள் வந்து குடியேறிவிடும். வீட்டுக்குள் சேறும், சகதியும், அழுக்கும் சேராமல் இருக்க முதலில் நம்மை நாம் சுகாதாரமாக வைத்துக்கொள்ள வேண்டும்.
வெளியே சென்றுவிட்டு வீட்டிற்குள் வரும்போது அழுக்குகளை உடன் கொண்டுவந்து சேர்க்காமல் இருந்தாலே கிருமிகளை வீட்டுக்குள் வராமல் தடுக்கலாம். மழைக்காலம் மட்டுமல்லாமல் எல்லா நேரமும் வெளியே சென்றுவிட்டு வரும்போது செருப்பு, ரெய்ன் கோட், மாஸ்க் போன்ற பயன்படுத்திய பொருட்களை வைக்க வெளியே ஒரு தனியிடத்தை ஒதுக்கவேண்டும். வாசற்படிக்குக் கீழே இந்த இடத்தை ஒதுக்குவது சிறந்தது. நனைந்த உடைகளையும் வெளியே வைக்கவேண்டும்.
மழைக்காலத்தில் வெளியே செல்லும்முன்பே டவல், மாப் போன்ற பொருட்களை எடுத்துவைத்துவிட்டு செல்லவேண்டும். வீட்டிற்குள் நுழையும்போதே நம்மை நன்றாக உலர்த்திவிட்டு வந்தால்தான் ஈரம் படியாது. உலர்ந்த டவல்கள் தயாராக வைத்திருந்தால் விருந்தினர்கள் வந்தாலும் கொடுக்க எளிதாக இருக்கும்.
ரப்பர் மேட்கள் மற்றும் கார்பெட்களை வாசற்படியில் கண்டிப்பாக போட்டுவைக்கவேண்டும். குறிப்பாக ஈரமான காலங்களில் செருப்பை சுத்தப்படுத்த எளிதாக இருக்கும். இதுதவிர வீட்டிற்குள் நுழையும்போது சிறிய ஈரம் உறிஞ்சும் மேட்டையும் போட்டுவைத்தால் வீட்டை சுத்தமாக வைத்திருக்கமுடியும்.
மழைக்காலத்தில் பூச்சி மற்றும் புழுக்கள் நிறைய வரும். குறிப்பாக ஈரத்தன்மை அதிகமாக இருக்கும்போது கொசு அதிகம் வரும். அதனால் சமையலறை மற்றும் குளியலறையில் பாத்திரங்கள் மற்றும் பக்கெட்டுகளில் தண்ணீர் வைக்கக்கூடாது. இதனால் கொசு உற்பத்தியாகும். மேலும், தரை எப்போதும் ஈரமாகவே இருக்கும். கொசு வராமல் இருக்க ஜன்னல்களில் தடுப்பு போட்டு வைக்கவேண்டும். முடிந்தவரை மாலை நேரம் வந்தாலே கதவைப் பூட்டி வைப்பது சிறந்தது.
சுவற்றில் ஈரம் படியாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். வீட்டிற்குள் போதுமான காற்றோட்ட வசதி இல்லாதபோதுதான் இதுபோன்ற பிரச்னைகள் ஏற்படும். குறிப்பாக பாத்ரூம் குழாய்கள் இருக்கும் இடங்களில் விரிசல் ஏற்பட்டால் உடனே சரிசெய்யவேண்டும்.
மழைக்காலத்தில் பூச்சி வருகிறதே என்று எப்போதும் கதவு மற்றும் ஜன்னல்களை பூட்டியே வைத்தாலும் பிரச்னைதான். வீட்டிற்குள் ஈரப்பதம் அதிகமாகி பூஞ்சை வளர்ந்துவிடும். எல்லா காலங்களிலும் காற்றோட்ட வசதி இருப்பது அவசியம்.
மின் இணைப்புகள், ஸ்விட்ச் பாக்ஸ் மற்றும் ப்ளக் பாயிண்டுகளை கவனிக்கவேண்டும். மழைக்காலத்தில் மழைநீர் எளிதாக உள்ளே சென்று ஸ்விட்சை தொட்டாலே ஷாக் அடிக்கும். மழைக்காலத்தில் மின்சாரத்தால் நிறைய உயிரிழப்புகள் ஏற்படுவதை அடிக்கடி கேள்விப்படுவோம். எனவே முன்னெச்சரிக்கையாக இருப்பது நல்லது.
மரத்தாலான தரை, கதவு மற்றும் ஜன்னல்களை பராமரிப்பது அவசியம். அதிக ஈரம் படியும்போது, இறுகிவிடும் அல்லது விரிசல் விட்டுவிடும்.
டைல்ஸ், மொசேக் போன்ற தரைகளில் தண்ணீர் இருந்தால் சில நேரங்களில் தெரியாது. எனவே மாப் போட்டு துடைத்து வைப்பது சிறந்தது. மேலும் இதுபோன்ற தரைகள் இயல்பாகவே குளிர்ச்சியாக இருக்கும். தண்ணீர் இருந்தால் மேலும் குளிர்ச்சியாகி விடும். எனவே தரை எப்போதும் உலர்ந்திருப்பது அவசியம்.
Loading More post
'மெட்ரோ மேன்' ஸ்ரீதரன் முதல்வர் வேட்பாளர் இல்லை: கேரளா பாஜக தலைவர் 'திடீர்' பல்டி!
திமுக - காங்., அதிமுக - தேமுதிக தொகுதிப் பங்கீட்டில் நீடிக்கும் சிக்கல்... என்ன நடக்கிறது?
புதுச்சேரி: என்.ஆர். காங்கிரஸுடன் கூட்டணி அமைக்கிறதா மக்கள் நீதி மய்யம்?
கூட்டணி சிதைவடையாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது திமுக பொறுப்பு - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்
அதிமுக கூட்டணியில் தமாகாவுக்கு 3 தொகுதிகள் ஒதுக்கீடு?
'நல்ல நாள்', 'சமூக நீதி' - முதற்கட்ட வேட்பாளர் பட்டியல்... அதிமுக 'முந்தியது' ஏன்?
கேரளாவில் கட்சி மாறும் நிர்வாகிகள்... சமூக நீதியை உறுதிப்படுத்த தவறியதா காங்கிரஸ்?!
ஒதுங்கிய சசிகலா... தேர்தலில் எடுபடுமா தினகரன் வசமுள்ள 3 வியூகங்கள்?!
அப்பாஸ் சித்திக்: மேற்கு வங்க அரசியலின் புது வரவு... யாருக்கு லாபம்?