”கலாச்சார ஆய்வுக்குழுவில் தென்னிந்தியர்களை புறக்கணிப்பதா? அது ஆரியக் குழுதான்”: குமாரசாமி!

South-Indian-experts-to-be-included-in-Central-Cultural-Study-Group--Kumaraswamy-

இந்திய வரலாற்றை ஆய்வு செய்ய மத்திய அரசு அமைத்த கலாச்சார ஆய்வுக்குழுவிலுள்ள 16 பேரில் ஒருவர்கூட தென்னிந்தியர்கள் மற்றும் பெண்கள் இல்லை என்று கர்நாடகாவின் முன்னாள் முதல்வர் குமாரசாமி கடுமையாக விமர்சித்துள்ளார்.


Advertisement

கடந்த 14 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியக் கலாச்சாரத்தின் தோற்றம்  மற்றும் பரிணாம வளர்ச்சி மற்றும் உலகின் பிற கலாச்சாரங்களுடனான அதன் தொடர்புகள் குறித்து முழுமையான ஆய்வை நடத்துவதற்கு செப்டம்பர் 14 ஆம் தேதி இந்திய தொல்பொருள் மையம் மூலம் மத்திய அரசு ஒரு நிபுணர் குழுவை அமைத்தது. அந்தக் குழுவில் தென்னிந்தியர்கள் ஒருவர்கூட இல்லை. அதேபோல பெண்களும் இல்லை. இதனால், கர்நாடகாவின் முன்னாள் முதல்வர் குமாரசாமி தனது ட்விட்டர் பக்கத்தில்,

image


Advertisement

’தென்னிந்தியர்களை ஒதுக்கி வைப்பதன் மூலம் ஒட்டுமொத்த நாட்டின் வரலாற்றையும் கலாச்சாரத்தையும் புறக்கணிக்கிறது மத்திய அரசு. இந்திய வரலாறு என்பதை வட இந்திய வரலாறு என்பதாக உறுதிப்படுத்த பாஜக தலைமையிலான மத்திய அரசு முற்படுகிறது. அது அமைத்தக் குழு ஆரியக் குழுதான்’ என்றவர், மற்றொரு ட்விட்டில் ’நாட்டை எங்கள் தாய் மற்றும் புனித பசுவுடன் ஒப்பிட்டு பார்த்தவர்கள் நாங்கள். பெண்களை வணங்கும் ஒரு நாட்டின் கலாச்சாரத்தை ஆய்வு செய்யும் குழுவில் எந்த பெண்ணுக்கும் இடமில்லையா? ஆய்வுக்குழு மறுசீரமைக்கப்படவேண்டும்’ என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அவரைத்தொடர்ந்து தமிழக காங்கிரஸ் எம்.பி மாணிக் தாகூரும் இந்தக் குழுவை விமர்சித்துள்ளார்.


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement