சமூக வலைதளத்தில் தொடங்கிய பழக்கம்..வீட்டிலேயே ’குழந்தை’ பிரசவித்த சிறுமி.. இளைஞர் கைது

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

சமூக வலைதளம் மூலம் பழகி சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞரை போலீஸார் போஸ்கோ சட்டத்தின்கீழ் கைது செய்தனர்.


Advertisement

மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் 18 வயது இளைஞருக்கும் 16 வயது சிறுமிக்கும் 2 வருடங்களுக்கு முன்பு சமூக வலைதளம் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் இருவரும் அடிக்கடி நேரில் சந்தித்து பழகி வந்துள்ளனர். 

இதைத்தொடர்ந்து கடந்த ஜனவரி மாதம் அந்த இளைஞன் வீட்டில் யாரும் இல்லாதபோது சிறுமியை வரவழைத்துள்ளார். அப்போது அவரை பாலியல் வன்கொடுமையின் செய்துள்ளார். இதை தொடர்ந்து மூன்று மாதங்களுக்குப் பிறகு சிறுமி தான் கர்ப்பமானதை உணர்ந்துள்ளார்.


Advertisement

image

இதைத்தொடர்ந்து சிறுமி கடந்த செப்டம்பர் மாதம் பிரசவ பரிசோதனைக்காக நர்சிங் கோமிற்கு வந்துள்ளார். இதையடுத்து ஒரு ஆண் குழந்தையையும் வீட்டிலேயே அந்த சிறுமி பெற்றெடுத்துள்ளார். இதையடுத்து நர்சிங் கோம் அளித்த தகவலின் அடிப்படையில் அந்த இளைஞரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

இதேபோல் உத்திரபிரதேசத்தில் மார்க்கெட்டிற்கு சென்று வந்த சிறுமியை 5 பேர் கொண்ட கும்பல் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இச்சம்பவம் கடந்த 7 ஆம் தேதி நடைபெற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியது.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement