[X] Close

”வரதட்சணை கொடுக்காததால் வேறொரு பெண்ணுடன் திருமணம்” கணவன் மீது மனைவி புகார்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

திருப்பூரில் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துவதாகவும், வரதட்சணை கொடுக்காத காரணத்தால் வேறு பெண்ணுடன் திருமணம் செய்ய இருப்பதை தடுத்து நிறுத்தக்கோரி பாதிக்கப்பட்ட பெண் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.


Advertisement

image

திருப்பூர் வீரபாண்டி பகுதியை சேர்ந்தவர் சுகன்யா. பட்டதாரியான இவருக்கும் கிணத்துக்கடவு பகுதியை சேர்ந்த செல்வராஜ் என்பவருக்கும் கடந்த 2015ஆம் ஆண்டு திருமணம் நடந்துள்ளது. திருமணத்தின் போது சீர்வரிசையாக சுகன்யாவிற்கு 10 பவுன் நகைபோட்டு அனுப்பியுள்ளனர்.


Advertisement

இந்நிலையில், செல்வராஜின் தாயார் ரங்கநாயகி மேலும் 15 பவுன் நகை வரதட்சணையாக கேட்டு தொல்லை கொடுத்ததாகவும் இதனால் செல்வராஜோடு சேர்ந்து வாழ முடியாத வகையில் பல்வேறு இடையூறுகள் கொடுத்து வந்ததாக தெரிகிறது.

image

தற்போது அவர்கள் கேட்ட வரதட்சணையை கொடுக்காத காரணத்தால் வேறொரு பெண்ணுடன் திருமணம் நடத்த பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், இது குறித்து ஏற்கனவே காவல்நிலையத்தில் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காத நிலையில் பாதிக்கப்பட்ட சுகன்யா கணவரோடு சேர்த்து வைக்கக்கோரி, இன்று திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குடும்பத்தினருடன் வந்து மனு அளித்தார்.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement