எல்லா ஆவணங்களும் போலி.. ஹைதராபாத்தில் கைதான போலி மருத்துவர்.!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

போலி ஆவணங்களுடன் ஹைதராபாத்தில் மருத்துவர் மற்றும் கூட்டாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.


Advertisement

ஹைதராபாத்தில் உள்ள போடுப்பால் மேற்கு பாலாஜி ஹில்ஸில் வசிக்கும் போலி மருத்துவர் ஒய்.எஸ் தேஜா, அவரது கூட்டாளிகளான போகுடி சீனிவாஸ், வீரகாந்தம் வெங்கடராவ் ஆகியோர் போலி ஆவணங்களுடன் சிகிச்சை அளிப்பதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து போலி மருத்துவர் ஒய்.எஸ்.தேஜா வீட்டில் போலீசார் சோதனை மேற்கொண்டுள்ளனர்.

அப்போது அவரிடமிருந்து தற்காலிக சான்றிதழ்கள், 10-வது பட்டமளிப்பு சான்றிதழ்கள், இடைநிலை, எம்.பி.பி.எஸ்., பி.பி.ஏ. மற்றும் எம்.பி.ஏ. ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளது. கைப்பற்றப்பட்டுள்ள இந்த ஆவணங்கள் அனைத்தும் போலியானவை என போலீசார் தெரிவித்துள்ளனர்


Advertisement

 இவர்களுடன் சில பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் தொடர்பு வைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

loading...

Advertisement

Advertisement

Advertisement