இரட்டை வேடங்களில் நடிக்கிறாரா கார்த்திக்?மித்ரன் இயக்கும் புதிய ஆக்சன் படம்...!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

தற்போது மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன், பாக்யராஜ் கண்ணன் இயக்கும் சுல்தான் ஆகிய படங்களில் நடித்துவரும் கார்த்தி, அடுத்து பி.எஸ்.மித்ரன் இயக்கும் புதிய படத்தில் இரட்டை வேடங்களில் நடிக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.


Advertisement

சிவகார்த்திக்கேயன் நடித்த ஹீரோ படத்தைத் தந்த இயக்குநர் பி.எஸ்.மித்ரனுடன் கார்த்தி இணையும் படத்தைப் பற்றிய அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளிவரும். அதற்கான திரைக்கதை, வசனம் எழுதும் வேலைகளில் இயக்குநர் ஈடுபட்டு வருகிறார் . இதுவொரு ஆக்சன் படமாக இருக்கும் எனத் தெரிகிறது.

image


Advertisement

2011-ம் ஆண்டு வெளிவந்த சிவா இயக்கிய சிறுத்தை படத்தில் இரட்டை வேடங்களில் நடித்த கார்த்தி, பல ஆண்டுகளுக்குப் பிறகு இரண்டாவது முறையாக இரட்டை வேடம் ஏற்கிறார். சுல்தான் படத்தின் முக்கால்வாசி படப்பிடிப்பு முடிந்த நிலையில், அவருடைய அடுத்த ரிலீஸ் அந்தப் படமாகத்தான் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

loading...

Advertisement

Advertisement

Advertisement