கள்ளக்குறிச்சி மாணவி தற்கொலை: மயானத்தில் கைக்கடிகாரம்; விசாரணையை தீவிரப்படுத்தும் போலீஸ்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

கள்ளக்குறிச்சியில் தற்கொலை செய்துகொண்ட மாணவியின் உடல் எரியூட்டப்பட்ட மயானக் கொட்டகையில் கூடுதல் மனித எலும்புகள், கருகிய நிலையில் கைக்கடிகாரம் மற்றும் செல்போன் உதிரி பாகங்கள் கண்டெடுக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை‌ அருகேயுள்ள மேட்டுநன்‌னாவரம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ஆறுமுகத்தின் மூத்த மகள் நித்ய ஸ்ரீ. நர்ஸிங் மாணவியான இவர் தற்கொலை செய்து கொண்டார். வீட்டில் ஒரே ஸ்மார்ட் ஃபோன் மட்டும் இருப்பதாக கூறப்படும் நிலையில் மாணவிக்கும், அவரது இரு சகோதரிகளுக்கும் ஆன்லைன் வகுப்பில் பங்கேற்பதில் ஏற்பட்ட பிரச்னையே இதற்கு காரணம் என உறவினர்கள் தரப்பில் சொல்லப்பட்டது. இதனையடுத்து அக்கிராமத்தில் உள்ள இடுகாட்டில் மாணவியின் உடல் எரியூட்டப்பட்டது.

image


Advertisement

 ஆனால் மாணவி எரியூட்டப்பட்ட இடத்தில் தற்போது கூடுதல் மனித எலும்புகள், கைக்கடிகாரம், செல்போன் உதிரி பாகங்கள் கருகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவலர்கள் அவ்விடத்தை ஆய்வு செய்த நிலையில், எலும்புகளை தடயவியல் நிபுணர்கள் ஆய்வுக்காக எடுத்துச்சென்றனர்.

image

இதனிடையே, மேட்டாத்தூர் கிராமத்தைச் சேர்ந்த முருகன் என்பவர் தனது மகன் ராமுவை காணவில்லை என அண்மையில் காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இளைஞர் ராமு தற்கொலை செய்துகொண்ட மாணவி நித்யஸ்ரீயை ஒருதலையாக காதலித்து வந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது.


Advertisement

image
இதுகுறித்து காவல்துறையினர் கூறும் போது “ மாணவி உடல் எரியூட்டப்பட்ட நாளன்று இரவில் இடுகாட்டு பகுதியில் ராமு சுற்றி திரிந்துள்ளான். அனைவரும் சென்றபின்னர் இரவில் இளைஞர் ஒருவரின் அலறல் சத்தம் கேட்டதாகவும் அப்பகுதியினர் கூறினர். எனவே ஒருதலை காதலாக இருந்தாலும் இளம்பெண் இறப்பை ஏற்க முடியாமல் மாணவி உடல் எரிந்துகொண்டிருக்கும் போதே அதில் பாய்ந்து இளைஞர் ராமு உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

அதேநேரத்தில் மாணவியின் வீட்டில் நான்கு ஸ்மார்ட்ஃபோன்கள் இருக்கிறது. எனவே மாணவி தற்கொலை செய்து கொண்டதற்காகக் கூறப்படும் காரணம் குறித்தும் சந்தேகம் எழுந்துள்ளது. எனினும் முழுமையான விசாரணைக்கு பின்னரே மயான கொட்டகையில் கருகியது யார் என்பது உள்ளிட்ட முழுமையான விவரம் தெரியவரும் என்றனர்.

loading...

Advertisement

Advertisement

Advertisement