போதையில் மினிவேனை தாறுமாறாக ஓட்டிய டிரைவர்... மோதிய வேகத்தில் சாய்ந்த மின்கம்பம்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

மதுரை சோழவந்தான் அருகே தாறுமாறாக ஓடிய மினிவேன் மின் கம்பத்தில் மோதியதால் பரபரப்பு ஏற்பட்டது.


Advertisement

image

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே மேலக்கால் பகுதி பிரதான சாலையில் இன்று காலை தாறுமாறாக ஒடிய மினி சரக்கு வாகனம் சாலையின் அருகே உள்ள மின் கம்பத்தில் மோதிய விபத்தில் மின் கம்பம் சாய்ந்து விழுந்தது. இதனை அடுத்து மினி வேன் ஒட்டுநர் அச்சத்தில் வாகனத்தை அங்கே நிறுத்திவிட்டு தப்பி ஒடினார்.


Advertisement

image

மின் கம்பம் சாய்ந்ததை தொடர்ந்து மின் கம்பிகள் தரையில் வீழ்ந்த நிலையில், உடனடியாக மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இதனால் அப்பகுதியில் சுமார் 4 மணி நேரம் மின்தடை ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த மின்வாரிய ஊழியர்கள் மின்கம்பத்தை சரிசெய்து வருகின்றனர்.

image
இச்சம்பவத்திற்கு காரணமான மினிவேன் ஒட்டுநர், மதுபோதையில் வாகனத்தை ஓட்டியதால் மின்கம்பத்தில் மோதி விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் விபத்து ஏற்படுத்திய ஓட்டுநரை போலீசார் தேடி வருகின்றனர்


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement