1 நிமிடத்தில் 29 நம்பர் ப்ளேட்களை கையால் கிழித்து கின்னஸ் சாதனை - யார் அவர்?

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

தொழில்முறை வலுதூக்கும் சாம்பியனான பில் கிளார்க், 1 நிமிடத்தில் 29 வாகன நம்பர் ப்ளேட்களை கையால் கிழித்து புதிய கின்னஸ் சாதனையை படைத்துள்ளார்.


Advertisement

image

அமெரிக்காவின் பிரபல வலுதூக்கும் சாம்பியனான பில் கிளார்க், புதிய சாதனையை படைக்கும் விதத்தில், 1 நிமிடத்தில் 29 வாகன நம்பர் ப்ளேட்களை தனது கையால் கிழித்தெறிந்துள்ளார். கடந்த 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 22 ஆம் தேதி ஒரு நிமிடத்தில் 23 நம்பர் ப்ளேட்களை அவர் கிழித்த நிலையில் தற்போது படைத்துள்ள இந்தச் சாதனையின் மூலம் அவரது சாதனையை அவரே முறியடித்துள்ளார். இந்தச் சாதனை கின்னஸ் புத்தகத்திலும் இடம்பெற்றுள்ளது.


Advertisement

image

இது குறித்து பில் கூறும் போது “ உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால் இந்தச் சாதனையை புரிவதற்காக கின்னஸ் என்னை தொடர்பு கொண்டபோது நான் அதற்கு தயாராக இல்லை. அதன் பின்னர் அறக்கட்டளைகள் சில என்னை தொடர்பு கொண்டு பேசின. அவர்கள் செய்யப்போகும் நற்செயலுக்காகவே இந்தச் சாதனையை செய்ய ஒப்புக்கொண்டேன்.

என்னை சுற்றியிருந்த மக்களின் ஆர்ப்பரிப்பு ஆச்சரியம் அளிக்கும் வகையில் இருந்தது. அவர்களுக்கு நீங்கள் எப்போதும் வேண்டுமானலும் உதவ முடியும். உங்களது துறையில் நீங்கள் உச்சத்தை அடையும் பட்சத்தில், மக்களுக்கு உதவி செய்வதென்பது உங்களின் பொறுப்பு” என்றார். இந்நிகழ்ச்சி கொரோனா முன்கள பணியாளர்களுக்கு நிதி திரட்டும் வகையில், அமெரிக்காவின் என் வொய் எஸ்ஜி மைதானத்தில் கடந்த வியாழக்கிழ்மை நடைப்பெற்றது.


Advertisement

 

loading...

Advertisement

Advertisement

Advertisement