தமிழகத்தில் செப்டம்பர் 1 முதல் பொது போக்குவரத்து இயக்கம்?

Operation-of-internal-bus-transport-reliefs-likely-in-TN-Govt-release-on-unlock

தமிழகத்தில் செப்டம்பர் 1ம் தேதி முதல் பொது போக்குவரத்து தொடங்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


Advertisement

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. தமிழகத்தில் கடந்த மார்ச் 24ம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஊரடங்கு காரணமாக மாவட்ட எல்லைகள் மூடப்பட்டுள்ளதால் பேருந்து போக்குவரத்தும் முற்றிலுமாக முடங்கியுள்ளது. இதனால், பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர்.

இந்நிலையில் மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ள பொதுமுடக்க தளர்வுகளில் மெட்ரோ ரயில்கள் இயங்குவதற்கு அனுமதி; மாநிலத்திற்கு உள்ளே மக்கள் சென்று வருவதற்கு எந்த கட்டுப்பாடும் விதிக்கக்கூடாது; இ-பாஸ் நடைமுறை தேவையில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Advertisement

image

மத்திய அரசின் உத்தரவையடுத்து, தமிழகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பொது போக்குவரத்திற்கு தளர்வு அளிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் மெட்ரோ ரயில் சேவை இயக்கம், இ-பாஸ் நடைமுறை ரத்து, ஞாயிறு ஒருநாள் முழு ஊரடங்கு ரத்து ஆகியவற்றையும் செயல்படுத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு நாளை வெளியாக வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

 


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement