சாதிமல்லி பூச்சரமே... சங்கத் தமிழ் பாச்சரமே... எஸ்பிபி நலம்பெற மம்முட்டி வாழ்த்து

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

மலையாள மெகா ஸ்டார் மம்முட்டி, கே.பாலசந்தர் இயக்கிய அழகன் படப்பாடல்களை நினைவுகூர்ந்து, பாடகர் எஸ்பிபி நலம் பெற வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இந்தியப் படவுலகமே எஸ்பிபி விரைவில் நலம்பெற வேண்டி சமூக வலைதளங்களில் வாழ்த்துச் செய்திகளையும் வீடியோக்களையும் பதிவிட்டு பிரார்த்தனை செய்து வருகின்றனர்.


Advertisement

அந்த வரிசையில் ட்விட்டரில் பதிவிட்டுள்ள மம்முட்டி, இரண்டு படப் பாடல்களைப் பற்றி கூறியுள்ளார். அதில் ஒரு படம் தெலுங்கில் கே. விஸ்வநாத் இயக்கிய ஸ்வாதி கிரணம். இசை கே.வி. மகாதேவன். 1992 ம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றியை அடைந்த அந்தப் படத்தில் பாடல்கள் பெரிதும் ரசிக்கப்பட்டவையாக இருந்தன.

image


Advertisement

அதேபோல 1991ம் ஆண்டு வெளியான அழகன் படத்தில் வந்த ‘சாதி மல்லி பூச்சரமே சங்கத் தமிழ் பாச்சரமே’, 'மழையும் நீயே', 'சங்கீத ஸ்வரங்கள்' போன்ற பாடல்களை மம்முட்டி சிலாகித்துள்ளார். அந்தப் படத்தில் மம்முட்டியுன் பானுப்ரியா, கீதா, மதுபாலா ஆகியோர் நடித்திருந்தார்கள். மரகதமணி இசையில் எஸ்பிபி பாடிய பாடல்கள் இன்றும் ரசிகர்களின் விருப்பப் பட்டியலில் உள்ளன.

இரண்டு படங்களின் பாடல்களையும் சுட்டிக்காட்டியுள்ள மம்முட்டி, விரைவில் நலம்பெறவேண்டும் என்று எஸ்பிபிக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

loading...

Advertisement

Advertisement

Advertisement