தூத்துக்குடி அருகே விளைநிலங்களில் எரிவாயு குழாய் பதிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் ஐ.ஓ.சி.எல். அதிகாரியை சிறைபிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
ஐ.ஓ.சி.எல். நிறுவனம் சார்பில், நாகப்பட்டினம் தொடங்கி கடலோர மாவட்டங்கள் வழியே தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தனியார் தொழிற்சாலைக்கு எரிவாயு குழாய் பதிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதன் இறுதிக்கட்ட பணிகள் தூத்துக்குடி மாவட்டத்தில் குலையன்கரிசல், பொட்டல்காடு, உள்ளிட்ட சுற்று வட்டார கிராமப் பகுதிகளில் தற்போது நடைபெற்று வருகிறது.
குலையன்கரிசல் பகுதிகளில் விவசாய நிலங்களின் வழியே ஐ.ஓ.சிஎல். நிறுவனத்தினர் எரிவாயு குழாய் பதிப்பதற்கு விவசாயிகள் ஆரம்பம் முதலே கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இது தொடர்பாக முத்தையாபுரம் காவல் நிலையத்தில் பல்வேறு புகார்களும் அளிக்கப்பட்டுள்ளன.
தூத்துக்குடி துணை ஆட்சியர் தலைமையில் ஐ.ஓ.சி.எல். நிறுவன அதிகாரிகளுக்கும், விவசாயிகளுக்கும் இடையே சமாதான கூட்டம் நடத்தப்பட்டு விவசாயிகளின் கோரிக்கைகளை பரிசீலிக்கப்படுவதாக முடிவு செய்யப்பட்டது. அதன்படி எரிவாயு குழாய் பதிக்கும் பணிக்காக நிலம் கையகப்படுத்தும் விவசாயிகளுக்கு தற்போது அளித்ததைவிட மூன்று மடங்கு இழப்பீடு பணம் தரவேண்டும் என விவசாயிகள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
இதை ஏற்றுக்கொண்ட ஐ.ஓ.சி.எல். நிறுவனத்தினர் எரிவாயு குழாய் பதிக்கும் பணியை தொடர்ந்து வந்தனர். ஆனால் சமாதான கூட்டத்தில் பேசியபடி விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு தொகையை நிறுவனத்தினர் தரவில்லை என கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து நிலத்திற்கு இழப்பீடு பெறாத 15 விவசாயிகள் மதுரை உயர் நீதிமன்ற கிளையில் வழக்கு தொடர்ந்தனர்.
இவ்வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், ஐஓசிஎல் நிறுவனத்தினர் நேற்று கனரக வாகனங்கள் உடன் விவசாய நிலங்களுக்கு வருகை தந்து குழாய் பதிக்கும் பணிகளை மேற்கொண்டனர். இதைத்தொடர்ந்து அங்கு கூடிய விவசாயிகள் நீதிமன்றம் வழக்கு நிலுவையில் இருக்கும்போது எப்படி குழாய் பாதிக்கலாம் என கேள்வி கேட்டனர்.
இதற்கு ஐஓசிஎல் அதிகாரிகள் 'ஒருசிலரை' வைத்து விவசாயிகளை மிரட்டியதாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து குலையன்கரிசல் விவசாயிகள் அதிகாரியை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து அங்கு வந்த தூத்துக்குடி நகர துணை கண்காணிப்பாளர் கணேஷ் தலைமையிலான காவல்துறையினர், போராட்டம் நடத்திய விவசாயிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
நீதிமன்ற உத்தரவு வந்த பிறகு குழாய் பதிக்கும் பணிகள் நடைபெறும் என காவல்துறையினர் விவசாயிகளிடம் உறுதியளித்தனர். இதை தொடர்ந்து விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
Loading More post
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு; இன்று ஒப்பந்தம் கையெழுத்து!
”சீட் குறைக்கப்பட்டதற்கு காங்கிரஸ் கட்சியின் தவறுதான் காரணம்” - ப.சிதம்பரம்
இறுதியாகும் பேச்சுவார்த்தை... ஐபிஎல் அட்டவணை வெளியீடு... இன்னும் சில முக்கியச் செய்திகள்
பாஜக போட்டியிடும் தொகுதிகள் எவை? - அதிமுகவுடன் பேச்சுவார்த்தை
சூடு பறக்கும் தமிழக தேர்தல் களம்: இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள கூட்டணி பேச்சுவார்த்தை!
“6 தொகுதிக்கு கட்டாயப்படுத்தவில்லை; வேண்டுகோள் வைத்தார்கள்” திருமாவளவன் சிறப்பு பேட்டி
ஓவைசி Vs அப்பாஸ் சித்திக்... மேற்கு வங்கத்தில் பாஜகவுக்கு சாதகமா? - ஒரு பார்வை
ராகுல் காந்திக்கு பலப்பரீட்சை: காங்கிரஸின் 'ஜி-23' தலைவர்களால் சிக்கல் ஏன்?
“அவன் அடிச்சதே ஆண்டர்சன் பால்ல தான்யா..” பொளந்து கட்டிய ‘மான்ஸ்டர்’ ரிஷப் பண்ட்!