செல்போன் நிறுவனங்களில் முன்னணி நிறுவனமான சாம்சங் தனது உற்பத்தியை விரைவில் இந்தியாவில் துவங்க உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.
‘சர்வதேச அளவில் மொபைல் போன் உற்பத்தி நிறுவனங்களிடமிருந்து பெறப்பட்ட விண்ணப்பங்களின் அடிப்படையில் பி.எல்.ஐ (உற்பத்தியுடன் அடிப்படையிலான ஊக்குவிப்பு தொகை வழங்கும் திட்டம்) மிகப் பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது.
சாம்சங், பாக்ஸ்கான், விஸ்டரான், பெகட்ரான், லாவா, டிக்சான், மைக்ரோமேக்ஸ் என சுமார் 22 நிறுவனங்கள் செல்போன் நிறுவனங்களுக்கு தேவையான செல்போன் மற்றும் அதற்கான உதிரிபாகத்தினை உற்பத்தி செய்ய இந்த திட்டத்தின் கீழ் விண்ணப்பித்துள்ளன. இதில் வெளிநாட்டு நிறுவனங்களும் அடங்கியுள்ளன. இதன் மூலம் இந்த நிறுவனங்கள் சுமார் பதினோரு ஆயிரம் கோடி ரூபாயை இந்தியாவில் முதலீடு செய்யும்’ என கடந்த சில வாரங்களுக்கு முன்னர் தெரிவித்திருந்தார் மத்திய தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்.
அதை உறுதி செய்யும் வகையில் தென்கொரிய நிறுவனமான சாம்சங் இந்தியாவில் சுமார் மூன்று லட்சம் மதிப்பிலான செல்போன்களை உற்பத்தி செய்ய உள்ளதாக வணிக செய்திகளை வெளியிடும் பத்திரிகை நிறுவனம் உறுதி செய்துள்ளது.
மலிவான சம்பளத்தில் தொழிலாளர்கள் கிடைப்பதும், ஏற்றுமதி உட்பட இந்தியாவில் தொழில் தொடங்க ஏராளமான சலுகைகள் அறிவிக்கப்பட்டிருப்பதுமே சாம்சங் இந்தியாவில் தனது உற்பத்தியை துவங்க காரணமாக கூறப்படுகிறது. தற்போது அதற்கான இறுதிக்கட்ட பணிகளை சாம்சங் மேற்கொண்டு வருவதாகவும் தகவல் கிடைத்துள்ளது. வியட்நாம், பிரேசில் மற்றும் இந்தோனேஷியாவுக்கு அடுத்தபடியாக சாம்சங் நிறுவனத்தின் செல்போன் உற்பத்தி செய்யும் நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இணைய உள்ளது.
Loading More post
தோல்வியில் முடிந்த விவசாயிகளுடனான மத்திய அரசின் 9ஆம் கட்ட பேச்சுவார்த்தை
“நானே கொரோனா தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள தயாராக உள்ளேன்” - அமைச்சர் விஜயபாஸ்கர்
2ஜி வழக்கு: மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை பிப். 23ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு
“வழக்கறிஞர் முதல் தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் வரை” - மறைந்த ஞானதேசிகனின் அரசியல் பயணம்
அயோத்தியில் ராமர் கோயில் கட்ட ரூ.5 லட்சம் நன்கொடை அளித்த குடியரசுத் தலைவர்
ஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா? - திரைப்பார்வை
திமிறும் காளைகளை திமில் தழுவி அடக்கும் காளையர் - அவனியாபுரம் ஜல்லிக்கட்டு வீடியோ தொகுப்பு
'ஜல்லிக்கட்டு' ஆன 'சல்லிக்கட்டு'... தொன்மையும் வரலாறும் - ஒரு பார்வை
அனல் பறக்கும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு... சீறும் காளைகள், அடக்க பாயும் வீரர்கள்! - ஆல்பம்