100 சவரன் தங்கம் என நினைத்து கவரிங் நகைகளை கொள்ளையடித்துச் சென்ற கொள்ளையர்கள்!!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

சென்னையில் 100 சவரன் கவரிங் நகைக்கு ஆசைப்பட்டு 15 சவரன் தங்க நகைகளை விட்டுச் சென்ற கொள்ளையர்கள், கொள்ளையர்களால் அரங்கேறிய ருசிகர சம்பவம்.


Advertisement

image

சென்னை தாம்பரம் அடுத்த இரும்புலியூர், தமிழ்பூங்கா தெருவில் வசித்து வருபவர் ஜீவாநந்தம் (35). இவர் சேலையூர் பகுதியில் ஜெராக்ஸ் கடை நடத்தி வருகிறார். கடந்த 15ம் தேதி சனிக்கிழமையன்று ஈக்காட்டுதாங்கலில் உள்ள மாமியார் வீட்டிற்கு குடும்பத்துடன் சென்றுள்ளார். இன்று காலை 6 மணியளவில் அவரது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதாக பக்கத்து வீட்டுக்காரர் அவருக்கு தொலைபேசி வாயிலாக தகவல் தெரிவித்தார்.


Advertisement

image
தகவலறிந்து ஈக்காட்டுதாங்கலில் இருந்து இரும்புலியூர் வந்து பார்த்த போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு வீட்டின் உள்ளே இருந்த பிரோவும் உடைக்கப்பட்டிருப்பதை கண்ட அவர், பீரோவில் இருந்த 15 சவரன் தங்க நகைகள் கொள்ளை போனதாக தாம்பரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீசாரும் கைரேகை நிபுணரும் வர வேண்டும் என்பதால் ஜீவாநந்தம் பீரோவை திறந்து பார்க்கவில்லை.

image
போலீசார் வந்து பீரோவை திறந்து பார்த்த போது உள்ளே இருந்த 15 சவரன் தங்க நகைகள் அடங்கிய பையை எடுத்து காண்பித்தனர். இதனை கண்ட ஜீவானந்தம் பெருமகிழ்ச்சி அடைந்தார். பின்னர் ஜீவானந்தம் சோதனை செய்து பார்த்ததில் 3 நகை பெட்டிகளில் வைத்திருந்த தனது 3 பெண் குழந்தைகளின் கவரிங் நகைகள் சுமார் 100 சவரன் அளவிற்கு கொள்ளையர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளது தெரியவந்தது

loading...
Related Tags : Chennaiசென்னை

Advertisement

Advertisement

Advertisement