''நகலெடுக்க முடியாத உடல்மொழி'' - ரஜினிக்கு கவிதை எழுதிய வைரமுத்து!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

ரஜினிகாந்துக்கு கவிஞர் வைரமுத்து வாழ்த்து தெரிவித்துள்ளார்


Advertisement

இந்திய திரை உலகின் சூப்பர் ஸ்டாரான நடிகர் ரஜினிகாந்த் திரைத்துறைக்குள் நுழைந்து 45 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள சூழலில் அவரது ரசிகர்கள் அதனை சமூக வலைத்தளங்களில் கொண்டாடி வருகின்றனர். நடிகர்கள், இயக்குனர்கள், பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் நடிகர் ரஜினிகாந்திற்கு வாழ்த்து சொல்லி வருகின்றனர்.

image


Advertisement

 

இதற்கான காமன் டிபி மற்றும் மோஷன் போஸ்டர் வெளியிடப்பட்டது. இந்நிலையில் ரஜினிகாந்துக்கு கவிஞர் வைரமுத்து வாழ்த்து தெரிவித்து பதிவிட்டுள்ளார். தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள வைரமுத்து,

நகலெடுக்க முடியாத
உடல்மொழி


Advertisement

சூரியச் சுறுசுறுப்பு

கிழவி குழவியென
வசப்படுத்தும் வசீகரம்

45 ஆண்டுகளாய்
மக்கள் வைத்த உயரத்தைத்
தக்கவைத்த தந்திரம்

இரண்டுமணி நேரத்
தனிமைப் பேச்சிலும்
அரசியலுக்குப்
பிடிகொடுக்காத பிடிவாதம்

இவையெல்லாம் ரஜினி;
வியப்பின் கலைக்குறியீடு!

என தெரிவித்துள்ளார்

 

loading...

Advertisement

Advertisement

Advertisement