வெளிநாடுகளில் சிக்கித்தவித்த 295 மாணவர்களை விமானத்தில் இந்தியா அழைத்து வந்த சோனு சூட்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

ரஷ்யா மற்றும் உஸ்பெகிஸ்தான் நாடுகளில் சிக்கித்தவித்த இந்திய மாணவர்களை விமானம் மூலம் மீட்டுக்கொண்டு வந்து மக்கள் மட்டுமல்லாமல் மாணவர்களின் ரியல் ஹீரோவாகவும் ஆகியுள்ளார் நடிகர் சோனு சூட்.  


Advertisement

இந்தியாவில் கடந்த மார்ச் 24 முதல் ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் 20 ஆயிரத்திற்கும்  மேற்பட்ட புலம்பெயர்ந்தோர்களை தங்கள் சொந்த ஊர்களுக்கு அனுப்பும் உதவிகளை செய்து இந்தியாவையே திரும்பிப் பார்கக வைத்தார் சோனு சூட். கேரளாவில் தவித்த ஆயத்த ஆடை தொழிலாளர்களை விமானம் மூலம், அவர்களின் சொந்த ஊரான ஒடிசாவுக்கு அனுப்பி வைத்தது, கிர்கிஸ்தான் நாட்டில் தவித்து வந்த மாணவர்களை இந்தியாவுக்கு கொண்டு வந்தது போன்ற அரசு செய்ய வேண்டிய பணிகளையெல்லாம் தனியொரு ஆளாக செய்தவர், தற்போது ரஷ்யா மற்றும் உஸ்பெகிஸ்தான் நாட்டில் தவித்து வந்த 295 மாணவர்களை ஸ்பைஸ்ஜெட் விமானத்தின் உதவியுடன்  இந்தியாவிற்கு அழைத்து வந்துள்ளார். 

 


Advertisement

image

 இந்நிலையில், தாங்கள் விமானத்தில் வரும் வீடியோக்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து, தங்களுக்கு பேருதவிகளைச் செய்த  நடிகர் சோனு சூட்டிற்கு அன்பையும் நன்றிகளையும் தெரிவித்து வருகிறார்கள் இந்திய மாணவர்கள். இரண்டு மாதங்களுக்குமேலாக சிக்கித் தவித்தவர்களை ரஷ்ய தலைநகர் மாஸ்கோவிலிருந்து சென்னைக்கும், கிர்கிஸ்தானிலிருந்து டெல்லிக்கும் விமானங்கள் இயக்கப்பட்டதாக ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

 


Advertisement

image

 

 

மேலும், பிலிப்பைன்ஸ் நாட்டில் சிக்கித்தவித்து வரும் 180 இந்திய மாணவர்களை வரும் ஆகஸ்ட் 7 ஆம் தேதி அந்நாட்டு தலைநகர் மணிலாவிருந்து டெல்லிக்கு விமானத்தை விமானத்தை சோனு சூட் உதவியால் இயக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.  இந்தியாவில் கடந்த மார்ச் 23 ஆம் தேதி முதல் சர்வதேச பயணிகள் விமானங்கள் இந்தியாவில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இருந்தாலும் இந்திய விமான ஒழுங்குமுறை சிறப்பு சர்வதேச சட்டத்தின்படி சர்வதேச விமானங்கள் வழக்கம்போல் இயங்கி வருகின்றன. கடந்த மே 25 முதல் உள்நாட்டு விமானங்கள் இயங்கி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. 

 

 

 

 

 

loading...

Advertisement

Advertisement

Advertisement