10 கோடி ஆண்டுகளுக்கு முந்தைய நுண்ணுயிரிகளை உயிர்ப்புடன் மீட்ட ஜப்பான் விஞ்ஞானிகள்!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

தென் பசிபிக் வண்டல் படிவங்களில் இருந்து சேகரிக்கப்பட்ட 10 கோடி ஆண்டுகளுக்கு முந்தைய நுண்ணுயிரிகளை வெற்றிகரமாக மீண்டும் உயிர்ப்புடன்  மீட்டுள்ளனர் ஜப்பானிய விஞ்ஞானிகள்.


Advertisement

கடலுக்கு அடியில் உள்ள பழைமையான புதை படிவங்களின் மாதிரிகள்  பழைய பருவநிலை மற்றும் ஆழமான கடலின் சுற்றுச்சூழல் அமைப்பையும் புரிந்துகொள்ள உதவுகின்றன. அந்த காலகட்டம் முதல் கண்டங்கள் மாறிவிட்டன. கடல்கள் உயர்ந்து வீழ்ச்சியடைந்தன. இறுதியாக மனிதர்கள் பரிணாம வளர்ச்சியை அடைந்ததாக அறிவியல் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

     image


Advertisement

இந்த நிலையில், புதுமையான நன்கு வடிவமைக்கப்பட்ட ஆய்வக நடைமுறைகள் மூலம்  நுண்ணுயிரிகளைப் புத்துயிர் பெறவைத்த விஞ்ஞானிகள் அவற்றைப் பெருக்கியுள்ளனர். பழைய வண்டல்களில் உள்ள நுண்ணியிரிகள் தப்பிப்பிழைத்துள்ளன என்றும் மிகச்சரியான நிலைமைகளின் மூலம் அவற்றை உயிர்பிக்கமுடியும் என்றும் ஜப்பானி விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

image

புதைப்படிவங்களில் காணப்படும் நுண்ணுயிரிகள் வழியாக மனித பரிணாம வளர்ச்சியைப் புரிந்துகொள்ள முயற்சி செய்யும் ஆய்வுப்பணிகளில் தொடர்ந்து ஈடுபடும் விஞ்ஞானிகள் அடுத்தக்கட்ட ஆய்வுகளைத் தொடர்கின்றனர்.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement