மதுரை அருகே இரு சக்கர வாகனத்தில் கஞ்சா டோர் டெலிவரி செய்த இளைஞரை போலீசார் கைது செய்து அவரிடமிருந்து 1.4 கிலோ கஞ்சா மற்றும் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர்.
மதுரை மாவட்டம் நாகமலை புதுக்கோட்டை பகுதியில் இரு சக்கர வாகனம் மூலம் டோர் டெலிவரி முறையில் கஞ்சா விற்பனை செய்வதாக நாகமலைபுதுக்கோட்டை காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதனையடுத்து மேலக்குயில்குடி பகுதியில் ரோந்து சென்று காவல்துறையினர் இதுகுறித்து விசாரணை செய்தனர். அப்போது அப்பகுதியை சேர்ந்த சிவனேஸ்வரன் வயது ( 21) என்பவர் இருசக்கர வாகனம் மூலம் கஞ்சாவை டோர் டெலிவரியாக விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.
இதனையடுத்து சிவனேஸ்வரனை நாகமலை புதுக்கோட்டை காவல்துறையினர் கைது செய்து அவரிடமிருந்து 1.4 கிலோ கஞ்சா மற்றும் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர். மேலும், விசாரணையில் “கஞ்சா விற்பனை செய்வதால் நல்ல வருமானம் கிடைக்கிறது. ஆடம்பரமாக செலவு செய்வதற்காக கஞ்சா விற்பனை செய்து வந்தேன்” என சிவனேஷ்வரன் தெரிவித்தார். மேலும் சிவனேஸ்வரனிடம் கஞ்சா எங்கு இருந்து வாங்கப்பட்டது என்பது குறித்து நாகமலை புதுக்கோட்டை காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.
Loading More post
சட்டப்பேரவைத் தேர்தல்: உதய சூரியன் சின்னம் எத்தனை இடங்களில் போட்டி?
'பெங்காலி பெருமை' முதல் கள வியூகம் வரை... மம்தா நம்பிக்கையின் பின்புலம்!
துப்பாக்கி சுடுதலில் தங்கப் பதக்கம் வென்ற நடிகர் அஜித்! கொண்டாடி தீர்க்கும் நெட்டிசன்கள்
234 தொகுதி வேட்பாளர்களையும் ஒரே மேடையில் அறிமுகப்படுத்திய நாம் தமிழர் சீமான்!
குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ. 1000 உரிமைத்தொகை - ஸ்டாலின் அறிவிப்பு
“6 தொகுதிக்கு கட்டாயப்படுத்தவில்லை; வேண்டுகோள் வைத்தார்கள்” திருமாவளவன் சிறப்பு பேட்டி
ஓவைசி Vs அப்பாஸ் சித்திக்... மேற்கு வங்கத்தில் பாஜகவுக்கு சாதகமா? - ஒரு பார்வை
ராகுல் காந்திக்கு பலப்பரீட்சை: காங்கிரஸின் 'ஜி-23' தலைவர்களால் சிக்கல் ஏன்?
“அவன் அடிச்சதே ஆண்டர்சன் பால்ல தான்யா..” பொளந்து கட்டிய ‘மான்ஸ்டர்’ ரிஷப் பண்ட்!