ஆந்திரா செல்லும் சாலையில் நிலச்சரிவு: மாற்றுப் பாதையில் செல்ல அறிவுறுத்தல்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

தமிழகத்தில் உள்ள வேலூர் மாவட்டத்தில் இருந்து ஆந்திர மாநிலம் செல்ல பேர்ணாம்பட்டு, பத்திரப்பல்லி வழியே செல்லும் மலை பாதையே பிராதான சாலையாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.


Advertisement

image
இந்நிலையில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால் ஆந்திராவுக்கு செல்லும் மலை பாதையில் உள்ள பத்திரப்பல்லி அருகே நான்கு கிலோ மீட்டர் தொலைவில் நிலச்சரிவு ஏற்பட்டு சாலைகள் சேதம் அடைந்துள்ளன. இதைத்தொடர்ந்து சாலை சரிபார்ப்பு பணி நடைபெற இருப்பதால் பத்திரப்பல்லி வழியே ஆந்திரா செல்லும் வாகனங்களுக்கு தடைவிதிக்கப்பட்டு சாலை மூடப்பட்டுள்ளது.

image
மேலும் வாகனங்கள் வி.கோட்டா வழியே சித்தூர்-பெங்களூர் செல்லும் நெடுஞ்சாலையை பயன்படுத்த மாவட்ட நிர்வாகம் அறிவுத்தியுள்ளது.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement