“இரவில் தனிமை வார்டில் பாடிக் கொண்டிருந்தேன்”- அமிதாப்பின் கொரோனா அனுபவங்கள்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

அண்மையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நடிகர் அமிதாப்பச்சன், மருத்துவமனை தனிமை வார்டில் இரவு நேரங்களின் தனிமையைப் போக்க பாடிக் கொண்டிருந்ததாகத் தெரிவித்துள்ளார்.


Advertisement

சில நாட்களாக மும்பையில் உள்ள நானாவதி மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார், தனிமை வார்டில் இருந்தால், ஒரு நோயாளியின் மனநிலை எப்படி இருக்கும் என்பதை அமிதாப் தற்போது  வெளிப்படுத்தியுள்ளார்.  மருத்துவர்கள் முதல் செவிலியர்கள் வரை அனைவரும் மருத்துவப் பாதுகாப்பு உடைகளை அணிந்திருப்பதால், அடுத்த ஒரு வாரத்திற்கு யார் முகத்தையும் பார்க்கமுடியாது என்று வேடிக்கையாக குறிப்பிட்டுள்ளார்.

image


Advertisement

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் அவர், அங்கு நடந்த சம்பவங்களை சுவைபட பகிர்ந்துள்ளார். ஒரு வாரம் யாரையும் பார்க்காமல் இருப்பது நோயாளியின் மனதைப் பாதிக்கும் என்றும்,  இந்த வாய்ப்பை நான் இரவில் பாடுவதற்குப் பயன்படுத்திக்கொண்டதாகவும் கூறியுள்ளார்.

“இரவின் அடர்ந்த கும்மிருட்டு. குளிரூட்டப்பட்ட அறையில் நடுங்கிக் கொண்டே  நான் பாடினேன்… மெல்ல கண்களை மூடி தூங்குவதற்கு முயற்சி செய்தேன். என்னைச் சுற்றி யாருமில்லை.  அதைச் செய்வதற்கான சுதந்திரம் எனக்கு இருந்தது. கடவுளின் அருளால் நான் மீள்வேன் என்பது எனக்குத் தெரியும்” என்றும் பிளாக்கில் அவர் பதிவிட்டுள்ளார்.

loading...

Advertisement

Advertisement

Advertisement