மின்சாரத் துறை அமைச்சர் தங்கமணி கொரோனாவில் இருந்து தற்போதுதான் மீண்டு வந்துள்ளார். அவரே குழம்பி போய் உள்ளார் என திமுகவின் துரைமுருகன் விமர்சனம் செய்துள்ளார்.
மின் கட்டண விவகாரத்தில் தமிழக அரசை கண்டித்து கண்டித்து தமிழகம் முழுவதும் திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி துரைமுருகன், வேலூர் எம்.பி கதிர் ஆனந்த், அணைகட்டு எம்.எல்.ஏ நந்தகுமார் ஆகியோர் கறுப்புக் கொடி ஏந்தி காட்பாடியில் உள்ள துரைமுருகன் வீட்டின் மூன்பு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது பேசிய துரைமுருகன் “அனைத்து மாநிலத்திலும் ஆளுநரே இருக்கக்கூடாது என்பது தான் தி.மு.கவின் லட்சியம். எங்கள் ஆதிகால கொள்கை. இந்திய அரசியல் வரலாற்றில் சிந்திக்க வேண்டிய தருணம் வந்துவிட்டது. ஆளுநர்தான் ஒரு நிர்வாத்தை கையில் வைத்திருக்கிறார் என்பது அபத்தம் என்பதை சுட்டிக்காட்டி இருக்கிறது புதுச்சேரி நிகழ்வு. மின் கட்டணத்தில் குளறுபடி செய்ததே தங்கமணிதான். மின்சாரத் துறை அமைச்சர் தங்கமணி கொரோனாவில் இருந்து தற்போது தான் மீண்டு வந்துள்ளார். அவரே குழம்பி போய் உள்ளார்.
தமிழக அரசு அனைத்து உரிமையையுமே கொண்டு போய் மத்திய அரசிடம் கொடுத்து விட்டது. மத்திய அரசு எங்கள் திராவிட கொள்கைக்கு எதிரான கருத்தை உடைய ஒரு அரசு. பிற்படுத்தப்பட்டவர்கள், தாழ்த்தப்பட்டவர்கள் என்பது எல்லாம் பிஜேபி சிந்தனையில் கிடையாது. அவர்களுக்கு இந்துத்துவா என்ற ஒன்று தான். அதை தவிர வேறு ஒன்றும் கிடையாது. எனவே அதை முதலாவதாக வைப்பதற்கு எல்லாம் செய்வார்கள்.
கொரோனா நிதியை தமிழக அரசு கேட்டு வாங்கவில்லை. எந்த காலத்தில் மத்திய அரசு நிதியை கொட்டி கொடுத்துள்ளது. அனைத்து ஆட்சியிலும் வாதாடிதான் பெற வேண்டி உள்ளது. கறுப்பர் கூட்டத்திற்கும் எங்களுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை. அதற்கான தேவையும் தி.மு.கவிற்கு இல்லை. ஆம்பூர் முன்னார் எம்.எல்.ஏ அஸ்லம்பாஷா மிக நல்ல மனிதர். அவரது மறைவு வருத்தம் அளிக்கிறது. ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்” எனத் தெரிவித்தார்.
Loading More post
தமிழகத்தில் ஏப்ரல் முதல் வாரத்தில் தேர்தலா? - இன்று மாலை தேதி அறிவிப்பு
விவசாயிகள், ஏழைகளின் நகைக்கடன், மகளிர் சுய உதவிக்குழு கடன் தள்ளுபடி: முதல்வர் அறிவிப்பு
தேசியகுழு உறுப்பினர் முதல் மாநில செயலாளர் வரை... தா.பாண்டியனின் அரசியல் பயணம்
”அடித்தட்டு மக்களுக்காகவே வாழ்ந்தவர்” - தா.பாண்டியன் மறைவுக்கு அரசியல் தலைவர்கள் இரங்கல்
இன்று மாலை செய்தியாளர்களை சந்திக்கும் தலைமை தேர்தல் ஆணையர்- தேர்தல் தேதி அறிவிக்க வாய்ப்பு
ராகுல் காந்தியின் 'வடக்கு - தெற்கு' கருத்து: அதிர்வலையும் விளைவுகளும் - ஒரு பார்வை
“இப்படியா பிட்ச் ரெடி பண்ணுவீங்க”- நரேந்திர மோடி ஸ்டேடியத்தை கலாய்த்து தள்ளும் நெட்டிசன்ஸ்
’வடிவேலு உடல்மொழியை நினைச்சாலே பொழைச்சிக்கலாம்!’ - சிவாங்கி கலகல பேட்டி
திரையும் தேர்தலும் 7: எம்.ஆர்.ராதா தனிப்பாதை; சிவாஜியின் 'நகர்வு'; எம்.ஜி.ஆரின் எழுச்சி!