இப்போது இருமல், சளி, காய்ச்சல் என எது வந்தாலும் கொரோனாவாக இருக்குமோ என்று நம்மை பயம் காட்டி வருகிறது இந்த கொடிய நோய். இதனிடையே கொரோனாவில் 6 வகைகள் இருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். இதனால் நோயின் தீவிரம் அறிந்து சிகிச்சை கொடுக்கும்போது நோயாளிகள் விரைவில் குணமடைவார்கள் எனவும் தெரிவித்துள்ளனர்.
லண்டன் கிங்க்ஸ் கல்லூரியைச் சேர்ந்த் ஆராய்ச்சியாளர்கள் கொரோனா வைரஸ் பாதிப்பில் அதன் அறிகுறிகளை வைத்து 6 வகைகள் இருப்பதாக கண்டுபிடித்துள்ளனர்.
தொடர் இருமல், காய்ச்சல், வாசனை இழப்பு போன்றவை முக்கியமாக அறிகுறிகளாகக் கருதப்பட்டாலும் தலைவலி, உடல் சோர்வு, மூச்சுத் திணறல், தசை வலி, பசியின்மை, மனக் குழப்பம், வயிற்றுப்போக்கு போன்ற பிற அறிகுறிகளை வைத்து 6 வகைகளாகப் பிரித்துள்ளனர்.
அமெரிக்கா மற்றும் லண்டனில் இருந்து சேகரிக்கப்பட்ட 1600 மாதிரிகளில் இருந்து, எந்த வகை வைரஸ் தாக்கியுள்ளது என்பதை வைத்து கொரோனா அறிகுறிகளை வகைப்படுத்தியுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
முதல் வகையில் காய்ச்சல் இருக்காது. தலைவலி, வாசனை இழப்பு, தசைவலி, இருமல், தொண்டை வறட்சி, நெஞ்சு வலி போன்ற அறிகுறிகள் இருக்கும்.
இரண்டாவது வகையில் காய்ச்சல், தலைவலி, வாசனை இழப்பு, இருமல், தொண்டை வறட்சி, குரல் பாதிப்பு, பசியின்மை போன்ற அறிகுறிகள் காணப்படும்.
கேஸ்ட்ரோஇண்டெஸ்டினல் என்கிற மூன்றாவது வகையில் தலைவலி, வாசனை இழப்பு, பசியின்மை, வயிற்றுப்போக்கு, தொண்டை வறட்சி, நெஞ்சுவலி போன்ற அறிகுறிகள் இருக்கும். ஆனால் இருமல் இருக்காது.
நான்காவது வகையில் தலைவலி, வாசனை இழப்பு, இருமல், காய்ச்சல், குரல் பாதிப்பு நெஞ்சுவலி, உடல்சோர்வு போன்ற அறிகுறிகள் காணப்படும்.
தலைவலி, வாசனை இழப்பு, பசியின்மை, இருமல், காய்ச்சல், குரல் பாதிப்பு, தொண்டை வறட்சி, நெஞ்சு வலி, உடல் சோர்வு, குழப்பம், தசைவலி போன்றவை ஐந்தாவது வகையின் அறிகுறிகள்.
குறிப்பாக மூச்சுத் திணறல், தலைவலி, வாசனை இழப்பு, பசியின்மை, இருமல், காய்ச்சல், குரல் பாதிப்பு, தொண்டை வறட்சி, நெஞ்சு வலி, குழப்பம், தசைவலி, வயிற்றுப்போக்கு, வயிற்றுவலி போன்ற அதிகமான அறிகுறிகள் காணப்படும். லேசான காய்ச்சல் அல்லது உடலில் தடிப்புகள் உள்ள நோயாளிகள் கூட தீவிர பாதிப்பிற்குள்ளாகி இறக்க நேரிடும்.
6 வகைகளில் பெரும்பாலான அறிகுறிகள் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாக இருந்தாலும், குழப்பம், வயிற்றுவலி, மூச்சுத் திணறல் போன்றவை கோவிட்- 19இன் முக்கிய அறிகுறிகளாகக் கருதப்படும். வயது, பாலினம் மற்றும் உடல் அமைப்பை அடிப்படையாக வைத்து தேர்ந்தெடுக்கப்பட்ட மாதிரிகளை வைத்து சோதனை நடத்தியதாகவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
Loading More post
அறுவைசிகிச்சைக்காக சில நாட்கள் ஓய்வு: கமல் அறிவிப்பு
"தென்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு” -சென்னை வானிலை ஆய்வு மையம்
செங்கல்பட்டு டோல்கேட்: கூட்ட நெரிசலால் வாகன ஓட்டிகள் அவதி
திமுகவில் இணைந்த ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள்
பாலக்கோட் தாக்குதல் பற்றி முன்பே அறிந்திருந்த அர்னாப்? கசிந்த வாட்ஸ்அப் உரையாடல்
கொரோனா தடுப்பூசியை யார் போடலாம்; யார் போடக்கூடாது? கோவாக்சின் பற்றிய முழுத் தகவல்
திடீர் மழையால் 'கருப்பான' பொங்கல்: நீரில் மூழ்கிய பயிர்கள்... வேதனையில் விவசாயிகள்!
பரிசோதனை முழுமைபெறாத கோவாக்சின் தடுப்பூசியை இந்திய அரசு வாங்குவது ஏன்? எழும்பும் கேள்விகள்
ஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா? - திரைப்பார்வை
சப்ஜெக்டில் மட்டும் சமூக அக்கறை போதுமா? - 'பூமி' என்னும் சினிமா எழுப்பும் கேள்விகள்!