இந்த வீடியோ கேமில் நீங்கள் வெல்ல முடிந்தால் 83 வருஷத்துக்கு நெட்ஃபிளிக்ஸ் இலவசம்!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

உலகின் முன்னணி ஓடிடி தளமாக திகழும் நெட்ஃபிளிக்ஸ், மலைக்க வைக்கும் புதிய சலுகை ஒன்றை அறிவித்துள்ளது. இச்சலுகையின் படி பயனர்கள் நெட்ஃபிளிக்ஸ் சேவையை அடுத்த 83 வருடங்களுக்கு முற்றிலும் இலவசமாகப் பயன்படுத்திக் கொள்ளலாம். சரியாகச் சொன்னால் அடுத்த ஆயிரம் மாத சந்தாவை நெட்ஃபிளிக்ஸ் முற்றிலுமாக இலவசமாக வழங்குகிறது. சரி, இந்த சலுகையைப் பெற என்ன செய்ய வேண்டும்?


Advertisement

இந்த 83 வருட இலவச சந்தாவைப் பெற செய்ய வேண்டியதெல்லாம் ‘The Old Guard’ என்ற வீடியோ கேமில் அதிக ஸ்கோர் பெறுவதுதான்.

imageஓல்டு கார்ட் கேமில் லாபிரிஸ் என்ற அழிக்கமுடியாத இனத்திற்காக விளையாடும் நீங்கள் எதிரிகளை அழிக்க வேண்டும். இதில் உங்களுக்கு ஆயுதமாகப் பிரம்மாண்டமான, இரட்டை-பிளேடட் கோடரியான ஒரு கை லேப்ரிஸை பயன்படுத்தி முடிந்தவரை அதிக எதிரிகளைக் கொன்று வீழ்த்துவதே கேமின் டாஸ்க். இயன்றவரை அடிபடுவதைத் தவிர்க்கவும், விரைவாக எதிரிகளைக் கொல்லவும் முயற்சிக்க வேண்டும்.


Advertisement

இந்த போட்டி ஜூலை 19 வரை மட்டுமே தொடரும் என்றும் நிறுவனம் கூறியுள்ளது. இந்த குறிப்பிட்ட நாட்களில் அதிக ஸ்கோர் பெரும் நபருக்கு 83 வருடச் சந்தா முற்றிலுமாக இலவசமாக வழங்கப்படும்.

ஆனால் இந்த போட்டி அமெரிக்காவில் உள்ள நெட்ஃபிளிக்ஸ் பயனர்களுக்கு மட்டுமே என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது நமக்குச் சற்று ஏமாற்றம் தான். ஆனாலும் கூட, ஆன்லைனில் இந்த கேமை நீங்கள் விளையாடி மகிழலாம். 

loading...

Advertisement

Advertisement

Advertisement