வேளாண் பல்கலைக்கழக மாணவர் சேர்க்கை: வெளியானது அறிவிப்பு

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கிவரும் 14 உறுப்புக் கல்லூரிகள் மற்றும் 28 இணைப்புக் கல்லூரிகளில் 10 இளங்கலை படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை ஆகஸ்டு முதல் வாரத்தில் தொடங்க உள்ளது. உறுப்புக் கல்லூரிகளில் 1600 இடங்களுக்கும், இணைப்புக் கல்லூரிகளில் 3100 இடங்களுக்கும் மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளதாக பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.


Advertisement

image

மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பம், தரவரிசை பட்டியல், கலந்தாய்வு, இட ஒதுக்கீடு, சான்றிதல் சரிபார்ப்பு, பாடப்பிரிவு தேர்ந்தெடுத்தல் போன்ற அத்தனை பணிகளும் இணைய வழியாகவே நடைபெறும் என்றும் சொல்லப்பட்டுள்ளது. இது குறித்த மேலதிக தகவல்களை www.tnauonline.in மற்றும் www.tnau.ac.in ஆகிய இணையதள முகவரியில் பெறலாம் என்றும், மேலும் கூடுதல் தகவல்களுக்கு 0422-6611322,  0422-6611328, 0422-6611345, 0422- 6611346 இந்த தொலைபேசி எண்களை அலுவலக வேலைநேரத்தில் தொடர்புகொள்ளலாம் என்றும், தகவல் கேட்பதற்காக கல்லூரிக்கு நேரில் வருவதை தவிர்க்க வேண்டும் என்றும் பல்கலைக்கழகம் கேட்டுக்கொண்டுள்ளது.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement