Advertisement

ஓவர் வெயிட்டா... அப்போ இதனை முயற்சி செய்து பாருங்க..!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

தினமும் காலை வெயிலில் சிறிதுநேரம் நிற்கலாம். அதிக நேரம் சூரிய ஒளி படும்படி இருந்தால் ஹேப்பி ஹார்மோன்ஸ் என அழைக்கப்படுகிற செரொட்டோனின் உடலில் அதிகம் சுரக்கிறது. இது மனதை புத்துணர்வுடன் சந்தோஷமாக வைத்திருக்கிறது. மன அழுத்தம் அதிகமாகும்போது உடல் எடையும் அதிகரிக்கும் என்பது நம் அனைவரும் நன்கு அறிந்ததே. (நம்மை அறியாமலேயே அதிகம் சாப்பிட்டுவிடும் ஒருவித நோயை ஸ்ட்ரெஸ் ஈட் என்கிறார்கள்). வீட்டிற்குள்ளேயே இருந்தாலும் மன அழுத்தத்தை தவிர்த்திடுங்கள்.


Advertisement

image

குளிர்காலத்தில் சூடான, எண்ணெயில் பொரித்த உணவுகள், ஹாட் சாக்லேட் போன்ற கலோரி அதிகம் உள்ள உணவுகளையே சாப்பிடத் தூண்டும். வீட்டிற்குள்ளேயே இருப்பதால் ஏதாவது சாப்பிட்டுக் கொண்டே இருக்கத் தோன்றும். இதைத் தவிர்த்து புத்துணர்வு தரக்கூடிய, தாகத்தைத் தீர்க்கக்கூடிய ஜூஸ் மற்றும் எளிதில் செரிக்கக் கூடிய மென்மையான உணவுகளையே சாப்பிட்டால் உடலில் சேரும் கலோரியின் அளவு குறைந்து கொழுப்புகள் சேர்வது தடுக்கப்படுகிறது. மேலும் வீட்டிற்குள்ளேயே இருப்பதால் எப்போதும் மந்தமாக இருக்கும். அதைப் புரிந்துகொண்டு எப்போதும் உற்சாகமாக இயக்கத்திலேயே இருக்க விரும்புங்கள்.

image


Advertisement

உடல் எடையைக் குறைக்க சில எளிய வழிகள்:
காலை மாலை நேரங்களில் எளிய யோகா, உடற்பயிற்சி அல்லது நடைபயிற்சிகளை மேற்கொள்ளலாம்.
நிறைய தண்ணீர் குடியுங்கள்.
நிறைய பழ வகைகள், கீரை வகைகளை எடுத்துக்கொள்ளுங்கள். நோயெதிர்ப்பு சக்தி அதிகமுள்ள பூண்டு, இஞ்சி, கிராம்பு, பட்டை, மஞ்சள் போன்ற பொருட்களை உணவில் அடிக்கடி சேர்த்துக் கொள்வதும் உடலில் கொழுப்பு சேராமல் தடுக்கும்.
தோட்டம் மற்றும் வீட்டை சுத்தப்படுத்துதல், மாடித்தோட்டம் உருவாக்குதல் போன்ற ஏதேனும் ஒன்றில் ஈடுபடலாம்.
ஒரே இடத்தில் உட்கார்ந்து டிவி பார்ப்பதை தவிருங்கள். இது நொறுக்குத் தீனி அதிகம் சாப்பிடத் தூண்டிவிடும்.
மனதுக்கு இதமான, அதேசமயம் உற்சாகமளிக்கக் கூடிய பாடல்களை கேளுங்கள். ஓடியாடி வேலை செய்யுங்கள்
அதிகக் காரம் மற்றும் எண்ணெய் சேர்த்த உணவுகளைத் தவிர்த்திடுங்கள். அதேபோல் பழ ஜூஸ்களை குடிக்கலாம். பதப்படுத்தப்பட்ட குளிர்பானங்களை தவிர்த்துவிடுவது நல்லது.

Related Tags : how to lose weight easilyover weight
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement