தமிழகத்தில் பொதுமுடக்கம் நீட்டிப்பா?: முதலமைச்சர் விளக்கம்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

அரசின் நடவடிக்கைகளால் தமிழகத்தில் கொரோனா உயிர்ச் சேதம் குறைக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.


Advertisement

திருச்சியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த ஆய்வுக் கூட்டத்திற்கு பின் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது “ பொது முடக்கம் முடிவு குறித்து மருத்துவ குழுவினருடம் ஆலோசனை நடத்தப்பட்டு முடிவு செய்யப்படும். மருத்துவ நிபுணர் குழுவின் ஆலோசனை பரிந்துரைப்படி அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். அரசின் நடவடிக்கைகளால் கொரோனா உயிர்ச்தேசம் குறைக்கப்பட்டுள்ளது. மருத்துவம் சார்ந்த பிரச்னைக்கு அனைத்து கட்சி கூட்டம் நடத்துவதற்கானத் தேவை ஏற்பட வில்லை.

image


Advertisement

பொது முடக்கத்தால் மாதம் சுமார் 12 ஆயிரம் கோடி இழப்பு ஏற்படும் நிதிச் செயலர் கூறியுள்ளார். தொழிற்சாலைகள் மூடப்பட்டதால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்குவதில் எந்த மாற்றமும் இல்லை" என்று பேசினார்

loading...

Advertisement

Advertisement

Advertisement