JUST IN

Advertisement

"மருத்துவமனை என்னை அலட்சியப்படுத்தியது" - உயிரிழந்த கொரோனா நோயாளியின் ஆடியோ

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

கேரளாவைச் சேர்ந்த 28 வயதான கலால் அதிகாரி ஒருவர் இறந்த ஒரு நாள் கழித்து, மருத்துவமனை தன்னை அலட்சியமாக நடத்தியதாகப் பேசியிருந்த ஆடியோவை அவரது உறவினர்கள் வெளியிட்டுள்ளனர்.


Advertisement

கண்ணூர் அருகே மட்டனூரில் கலால் துறையில் ஓட்டுநராக பணிபுரிந்தவர் சுனில்குமார். இவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். கண்ணூரில் உள்ள பரியாரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் இருந்த அவர் வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் அங்குச் சிகிச்சை பலனின்றி அவர் கடந்த வியாழக்கிழமை உயிரிழந்தார். கலால் அதிகாரியின் திடீர் மறைவு குறித்தும் இறப்புக்கான காரணங்களையும் விசாரிக்கச் சுகாதாரத் துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. 

இந்நிலையில், மருத்துவமனை தன்னை அலட்சியமாக நடத்தியதாக நோயாளி பேசியிருந்த ஆடியோவை அவரது உறவினர்கள் வெளியிட்டுள்ளனர். அதில், "எனக்கு மூச்சு விடச் சிரமமாக உள்ளது. இதன் தீவிரத்தை யாரும் புரிந்து கொள்ளவில்லை. செவிலியர்கள் எதுவும் செய்யவில்லை. வேகமாக வரச் சொல்லுங்கள்" எனக் கேட்கிறது. 


Advertisement

இந்த ஆடியோ தற்போது மலையாளம் தொலைக்காட்சிகளில் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

அதிக காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பெலாதூரைச் சேர்ந்த அவர் முதலில் ஒரு தனியார் மருத்துவமனைக்குச் சென்று பின்னர் கொரோனா அறிகுறிகளை வெளிப்படுத்தியதால் மருத்துவக் கல்லூரிக்குப் பரிந்துரைக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. சுனிலின் உறவினர்கள் எழுப்பிய மருத்துவ அலட்சியம் குறித்த குற்றச்சாட்டுகளை மருத்துவக் கல்லூரி அதிகாரிகள் மறுத்தபோதும் அவரது மரணம் குறித்த விசாரணைகள் நடந்து வருகின்றன.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement