சேலம் அருகே எஃப்எம் ரேடியோ போன்ற மர்மப் பொருள் வெடித்து சிதறியதில் விவசாயி ஒருவர் உயிரிழந்தார்.
சேலம் மாவட்டம் பனமரத்துப்பட்டி அடுத்த தும்பல்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் மணி. இவரது தோட்டத்தில் எஃப்எம் ரேடியோ போன்ற மர்ம பொருள் ஒன்று கிடந்துள்ளது. இதனை தனது வீட்டிற்கு கொண்டு வந்து வைத்திருந்த மணி, இன்று பிற்பகல் அதைத் திறக்க முற்பட்டுள்ளார். பின்னர் மின்சார இணைப்பு கொடுத்து அதை சோதனை செய்ய முயன்றபோது அந்த பொருள் பயங்கர சத்தத்தோடு வெடித்து சிதறியுள்ளது.
இந்தச் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் வந்து பார்த்தபொழுது மணி சம்பவ இடத்தில் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்துள்ளார். அவருடன் இருந்த அவரது பேத்தி சௌரதி மற்றும் உறவினர்கள் வசந்தகுமார், நடேசன் ஆகியோர் பலத்த காயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த வந்த சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தீபா கணிகர் விசாரணை மேற்கொண்டார். மர்மப் பொருள் வெடித்து சிதறியதில் வீட்டின் ஜன்னல் மற்றும் சுவர், மேற்கூரை உள்ளிட்ட பகுதிகள் சேதமடைந்து உள்ளன. இருப்பினும் முதற்கட்ட விசாரணையில் வெடித்துச் சிதறியது வெடிபொருள் அல்ல; அந்தப் பொருள் குறித்து அறிவியல் ரீதியான ஆய்வு நடத்தப்பட்டு பின்னர் தெரிவிக்கப்படும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தீபா கணிகர் தெரிவித்தார்.
Loading More post
மகாராஷ்டிராவில் கொரோனா சிகிச்சை மையத்தில் தீவிபத்து - 12 பேர் உயிரிழப்பு
கொரோனா அதிகமாக உள்ள மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி இன்று அவசர ஆலோசனை
ராஜீவ்காந்தி மருத்துவமனையில் 5 மடங்காக உயர்ந்த ஆக்சிஜன் தேவை
“மேற்கு வங்கத்தில் தேர்தல் பரப்புரைக்கு அனுமதி இல்லை!” - தேர்தல் ஆணையம்
கோவிஷீல்டு விலை உயர்வு: கொரோனா தடுப்பூசி சந்தையில் பொதுமக்களுக்கு சுமையா? - ஒரு பார்வை
கோவிஷீல்டு விலை உயர்வு: கொரோனா தடுப்பூசி சந்தையில் பொதுமக்களுக்கு சுமையா? - ஒரு பார்வை
மும்முறை உருமாறிய 'பெங்கால் கொரோனா'வின் தீவிரத்தன்மை எத்தகையது? - ஒரு பார்வை
காரை விற்று மக்களுக்கு உதவி... மும்பையின் 'ஆக்சிஜன் மேன்' ஷாஹனாவாஸ்!
’cowin’... 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள பதிவுசெய்யும் முறை