தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 567 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் 

567-people-have-been-discharged-from-coronavirus-in-Tamil-Nadu
 
 
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 567 பேர் கொரோனா நோயிலிருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 
 
தமிழகத்தில் நாளுக்குநாள் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதுதொடர்பான தகவல்களை சுகாதாரத்துறை தினந்தோறும் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் இன்று மட்டும் 817  பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 18 ஆயிரத்தைக் கடந்து 18,545 ஆக அதிகரித்துள்ளது.  
 
Image
 
அதேசமயம் தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 567 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 9909 உயர்ந்துள்ளது. மேலும் கொரோனாவால் இதுவரை மொத்தம் 133 பேர் உயிரிழந்திருக்கின்றனர். மேலும் இதுவரை 4,42,970 பேருக்குச் சோதனை செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
 
Image
சென்னையில் மட்டும் இன்று 558 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் கொரோனா பாதிப்பின் எண்ணிக்கை 12,203 ஆக உயர்ந்துள்ளது.  
 
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement