JUST IN

Advertisement

மதுரை : மாஸ்க் இன்றி வெளியே வந்தவர்கள் மூலம் அபராதமாக 1,83,000 வசூல்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

மதுரை மாவட்டத்தில் முகக்கவசங்கள் அணியாமல் வெளியே வந்த 1762 பேர் மூலம் 1,83,000 ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.


Advertisement

மதுரை மாவட்டத்தில் நோய் தொற்று ஏற்படாமல் இருக்க பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மதுரை மாவட்டத்தில் பொது இடங்களில் பணிபுரியும் அனைவரும் கண்டிப்பாக முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும் இல்லாவிட்டால் அபராதம் வசூலிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்திருந்தார்.

மாஸ்க் அணியாத 502 பேருக்கு அபராதம் ரூ ...


Advertisement

மாவட்ட நிர்வாகத்தின் தளர்வுகள் காரணமாக பல்வேறு தொழில்கள் குறைந்த பணியாளர்களை கொண்டு தொடங்கி இயங்கி வருகின்றன. இந்த நிலையில் மதுரையில் முகக்கவசம் அணியாமல் சாலையில் வாகனங்களில் வந்தவர்கள் , நடந்து சென்றவர்களிடம் கடந்த இரண்டு நாட்களாக அபராதம் வசூலிக்கப்பட்டது.

Over 500 fined for not wearing face mask, violating lockdown norms ...

இதில் மாநகராட்சி, ஊரகப் பகுதியைச் சேர்ந்த 1762 பேரிடம் அபராதம் விதிக்கப்பட்டு அவர்களிடமிருந்து அபராத தொகையாக ரூபாய் ஒரு லட்சத்து 83 ஆயிரம் ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது எனவும் தொடர்ந்து பொது இடங்களில் முகக் கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் எனவும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். எனவே பொதுமக்கள் தாங்கள் பணிபுரியும் இடங்கள் மற்றும் பொது இடங்களில் முகக்கவசம் கட்டாயம் அணிந்திருக்க வேண்டும் என்றும் மதுரை மாவட்ட ஆட்சியர் எச்சரித்துள்ளார்.


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement