[X] Close

1,500 வீடுகளுக்கு நேரில் சென்று உணவு விநியோகம் - காவல் ஆய்வாளரின் அற்புத ஏற்பாடு 

Subscribe
Everyone-is-praising-the-police-inspector-who-has-been-providing-food-to-over-1500-houses
தன்னார்வலர்கள் உதவியுடன் 1500க்கும் மேற்பட்ட வீடுகளுக்கே சென்று உணவு வழங்கி வரும் முறப்பநாடு காவல் ஆய்வாளரை அனைவரும் பாராட்டி வருகின்றனர். 
 
கொரோனா நோய் தொற்று பரவல் காரணமாக மத்திய அரசு மே 17 வரை ஊடரங்கை நீட்டித்துள்ளது. ஆகவே ஏழை எளிய மக்கள், முதியவர்கள் எனப் பலர் வருமானம் இல்லாமல் தவித்து வருகின்றனர். மேலும் பலர்  அன்றாடஉணவுக்குகூட வழியின்றி மிகுந்த சிரமப்பட்டு வருகின்றனர். இந்தச் சூழலில் தன்னார்வலர்கள் பலர் அரசின் வழிகாட்டுதல் அடிப்படையில் ஏழை எளிய மக்களுக்கு உதவி புரிந்து வருகின்றனர்.  
 
image
 
இதனிடையே, தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு அருகே பாறைக்குளம் கிராமத்தில் உள்ள ஸ்ரீ சாது சுவாமிகள் சித்தர் பீடத்தில் தினமும் 200 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வந்தது. இங்கு ஏழை மக்கள் அன்றாடம் வந்து உணவு உண்டு செல்வர். கொரோனா ஊரடங்கிற்குப் பின்பு  தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும், ஐந்து நபர்களுக்கு மேல் ஒரு இடத்தில் கூடக் கூடாது போன்ற விதிமுறைகள் விதிக்கப்பட்டதால்  இது தடைப்பட்டது.
 
இந்நிலையில் இதனை அறிந்த முறப்பநாடு காவல் ஆய்வாளர் பார்த்திபன் சில முயற்சிகளை மேற்கொண்டார்.  இவர் ரோந்து செல்லும் போது ஏழை எளிய மற்றும் வயது முதிர்ந்தோர் என தனித்தனியே  கணக்கெடுத்து, அதனை வைத்து பட்டியலில் உள்ள மக்களுக்கு மதியம்  உணவை மட்டும் அவர்களின் வீடுகளுக்கே கொண்டு சென்று கொடுக்க ஏற்பாடுகளைச்செய்தார். அதன்படி வல்லநாடு சித்தர் பீடத்தில் தினமும் குறைந்தது 270 கிலோ அரிசியிட்டு சமையல் செய்யப்பட்டு வருகிறது. அதனை சுமார் 60க்கும் மேற்பட்ட தன்னார்வலர்களை இணைத்து காலை 5 மணி முதல் சமையல் வேலையை ஆரம்பித்து காலை 11 மணிக்குள் பார்சல் செய்து விடுகின்றனர். 
 
image
 
பின்னர் 1500 பார்சல்கள் தயார் செய்து ஒவ்வொரு கிராமத்திற்கும் எத்தனை பேருக்குத் தேவைப்படுகின்றது என எழுதி அடுக்கி வைத்து விடுகின்றனர். சுமார் 35 கிராமங்களுக்கு  ஒவ்வொரு கிராமத்திலிருந்தும் 2 இளைஞர்கள் இருசக்கர வாகனம் அல்லது ஆட்டோவில் வந்து எடுத்துச் சென்று வீடு வீடாக வழங்குகின்றனர். முறப்பநாடு காவல் ஆய்வாளர் பார்த்திபன் முயற்சியால் கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதி முதல் தற்போது வரை தினமும் 1500 பேர் ஒரு வேளை உணவை இலவசமாக உண்டு வருகின்றனர். 1500 பேருக்கு உணவு வழங்க ஏற்பாடு செய்த காவல் ஆய்வாளரைப் பலரும் பாராட்டை  வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் புதிய தலைமுறை இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்க
முக்கியச் செய்திகளை உடனுக்குடன் அறிய, நேர்த்தியான வாசிப்பு அனுபவம் பெற புதிய தலைமுறை ஆப் டவுன்லோடு செய்க >
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close