தென்கொரியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவுக்கு ஒரு உயிரிழப்புகூட இல்லை

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

தென்கொரியாவில் முதன்முறையாக கடந்த 24 மணி நேரத்தில் ஒரு உயிரிழப்பு கூட பதிவாகவில்லை என்ற நம்பிக்கை தரும் தகவல் கிடைத்துள்ளது.


Advertisement

 உலகளவில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. கொரோனாவால் 27 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 1 லட்சத்து 92 ஆயிரம் பேர் இதுவரை பலியாகியுள்ளனர். சீனாவில் பரவத்தொடங்கிய இந்த வைரஸ் அமெரிக்காவை கடுமையாக பாதித்துள்ளது. அந்நாட்டில் மட்டும் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

image


Advertisement

 கொரோனா வைரஸ் பரவலை திறமையாக கட்டுப்படுத்திய நாடுகளில் தென்கொரியாவும் ஒன்று. இங்கு கொரோனா வைரஸால் பாதிக்கப்படுவோர் மற்றும் உயிரிழப்போர் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வந்தது. இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் 6 பேருக்கு மட்டுமே புதிதாக கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

image

 கடந்த பிப்ரவரி 18ஆம் தேதிக்கு பின்னர் முதன்முறையாக தென்கொரியாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை இந்த அளவுக்கு குறைந்துள்ளது. அதே வேளையில் ஒருவர் கூட உயிரிழக்கவில்லை என தென்கொரிய நோய் தடுப்பு மையம் தெரிவித்துள்ளது. எனினும் மக்கள் தொடர்ந்து கட்டுப்பாடுகளை கடைப்பிடிக்க வேண்டுமென அரசு கேட்டுக்கொண்டுள்ளது.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement