மலைவாழ் மக்களுக்கு சேவையாற்றி டெங்குவால் உயிரிழந்த இளம்மருத்துவர்: கிராம மக்கள் தீப அஞ்சலி

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

டெங்கு காய்ச்சலால் உயிரிழந்த இளம் மருத்துவருக்கு ஊர் மக்கள் சார்பில் தீப அஞ்சலி செலுத்தி  கூடி மரியாதை செய்யப்பட்டது. 


Advertisement

image

 கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அடுத்துள்ள சிறுமுகை ரயான் நகர் பகுதியை சேர்ந்த வாசுதேவன் மற்றும் ஜோதிமணி தம்பதியரின் மகன் மருத்துவர் ஜெயமோகன். சிறுமுகையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் படித்த இவர் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வில் மாநில அளவில் மூன்றாம் இடம் பிடித்து அனைவரின் பாராட்டையும் பெற்றவர். இதன் பின்னர் சென்னை மருத்துவ கல்லூரியில் இணைந்து மருத்துவ பட்டப்படிப்பு முடித்த ஜெயமோகன், நீலகிரி மாவட்டம் தெங்குமரஹாடா அருகிலுள்ள அல்லி மாயார் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவராக பணியாற்றி வந்தார்.


Advertisement

அடர்ந்த காட்டின் நடுவே பரிசலில் பயணித்தே செல்ல வேண்டிய ஊரில் தங்கி, அங்குள்ள மலைக்கிராம மக்களுக்கு மருத்துவம் பார்த்து வந்தார் ஜெயமோகன். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் பணியின் போது காய்ச்சல் ஏற்பட்டதால், கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கபட்டார். அங்கு நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில் ஜெயமோகன் டெங்கு காய்ச்சலால் அவதிப்படுவது தெரிய வந்தது. தீவிர சிகிச்சையளிக்கப்பட்ட போதிலும் கடந்த பதினைந்தாம் தேதி அதிகாலை காய்ச்சல் அதிகரித்து மரணமடைந்தார்.

இந்தியாவில் கொரோனாவிற்கு முதல் காவல் அதிகாரி உயிரிழப்பு

image


Advertisement

மகனின் மரணம் குறித்து தகவல் கிடைத்ததும் துக்கம் தாளாமல் அவரது தாயார் ஜோதிமணி விஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்தார். மகன் மரணமடைந்து அவரது தாயார் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட சோகமான சூழலில் ஜெயமோகன் கொரோனா வைரஸ் காரணமாக இறந்து விட்டதாகவும் அவரது உடலை சொந்த ஊரான சிறுமுகை ரயான் நகருக்கு எடுத்து வர ஊர் மக்கள் எதிர்ப்பு தெரிவிப்பதாகவும் இதனால் அவரது தாயார் மனமுடைந்து விஷம் அருந்தியாதகவும் தவறான செய்திகள் வெளிவந்தன.

 இதனை முற்றிலும் மறுத்த இப்பகுதி மக்கள் மருத்துவர் ஜெயமோகன் எங்கள் ஊருக்கு பெருமை சேர்த்தவர், அவரது மரணம் எங்களது ஒவ்வொரு குடும்பத்திற்கும் பேரிழப்பு எனக்கூறி அவரது உடலை மேட்டுப்பாளையத்தில் தகனம் செய்ய துணையாக இருந்தனர். மேலும் மூன்றாம் நாளான இன்றிரவு ரயான் நகர் மற்றும் சிறுமுகை பகுதிகளை சேர்ந்த மக்கள் பலரும் ஒன்று கூடி உயிரிழந்த மருத்துவர் ஜெயமோகனுக்கு தங்களது அன்பை வெளிப்படுத்தும் விதமாக அவரது படத்திற்கு மலர்தூவி மெழுகுவர்த்தி தீபம் ஏந்தி மௌன அஞ்சலி செலுத்தினர்.

வழக்கறிஞரின் உதவியாளருக்கு கொரோனா : அச்சத்தில் சென்னை உயர்நீதிமன்றம்

சமூக இடைவெளியை கடைபிடித்து வரிசையாய் ஊர் மக்கள் அனைவரும் மெழுகுவர்த்தி ஏந்தி நின்றது மறைந்த இளம் மருத்துவர் ஜெயமோகனின் திடீர் மறைவு அவர்களுக்குள் ஏற்படுத்தியிருக்கும் கடும் துயரை வெளிப்படுத்துவதாகவும் ஊர் மக்கள் பற்றி பரப்பப்பட்ட வதந்திகளுக்கு பதிலளிக்கும் விதமாகவும் இருந்தது.

 

loading...

Advertisement

Advertisement

Advertisement