அரசு மட்டும்தான் அருள் செய்ய வேண்டுமென்றால் அறமென்பது எதற்காக என பாடலாசிரியர் வைரமுத்து பதிவிட்டுள்ளார்
நாடெங்கும் ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் வறுமையில் வாடும் பல ஏழைகள் உணவுக்கே வழியில்லாமல் திண்டாடி வருகின்றனர். மத்திய அரசும் மாநில அரசுகளும் பல்வேறு நிவாரணங்களை அறிவித்துள்ளன. மேலும், பொதுமக்கள் , ஏழைகளுக்கு உதவும் வகையில் உணவுப்பொருட்கள், அத்தியாவசிய பொருட்களை ஆங்காங்கே வழங்கி வருகின்றனர்.
ஆனால், வறுமையில் வாடும் ஏழைமக்களுக்கு உதவி செய்வதாக கூறிக்கொண்டு தனியார் அமைப்புகள், நபர்கள், கட்சிகள் போன்றவை நேரடியாக உதவி செய்யக்கூடாது என தமிழக அரசு கேட்டுக்கொண்டுள்ளது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் சமூக ஆர்வலர்களும், தன்னார்வலர்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இது குறித்து விளக்கம் அளித்த தமிழக அரசும், தற்போதைய சூழலில் தன்னார்வலர்கள் நேரடியாக உதவி செய்வது தொற்று நோயை அதிகரிக்கவே செய்யும். தன்னார்வலர்கள் அரசிடம் ஒப்படைத்தால் வருவாய் துறை மூலம் மக்களுக்கு விநியோகிக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது
அரசு மட்டும்தான்
அருள் செய்ய வேண்டுமென்றால்
அறமென்பதெதற்காக?
ஆணிவேர் மட்டும்தான்
நீர் வழங்க வேண்டுமென்றால்
பக்க வேர்கள் எதற்காக?#TNGovt #coronavirusinindia #Corona — வைரமுத்து (@vairamuthu) April 13, 2020
இந்நிலையில் இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள பாடலாசிரியர் வைரமுத்து, ''அரசு மட்டும்தான் அருள் செய்ய வேண்டுமென்றால் அறமென்பதெதற்காக? ஆணிவேர் மட்டும்தான் நீர் வழங்க வேண்டுமென்றால்பக்க வேர்கள் எதற்காக?'' என கேள்வி எழுப்பியுள்ளார்.
Loading More post
“வன்னியர்களுக்கான இடஒதுக்கீடுதான் பாமக குறைவான தொகுதிகளை பெறக்காரணம்” - அன்புமணி பேட்டி
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்!
அரசு பஸ் ஊழியர்களின் வேலைநிறுத்தம் வாபஸ்
"அதிகாரம், பண பலத்திற்கு முன்னால் யாராலும் தாக்கு பிடிக்க முடியாது" - ராகுல் காந்தி
தமிழக தேர்தல்: முடிவானது அதிமுக - பாமக தொகுதி பங்கீடு!
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?
கவுன்டவுனை தொடங்கிய கமல்: மூன்றாம் அணி இலக்கை நெருங்குகிறதா மக்கள் நீதி மய்யம்?
குழந்தைகளுக்கு தேவையான 'வைட்டமின் டி' உடலில் சேருவதை உறுதிசெய்வது எப்படி? - ஒரு வழிகாட்டி
இந்திய அணிதான் 'டார்கெட்'... மைக்கேல் வாகன் கக்குவது கருத்துகளா, அபத்தங்களா? - ஒரு பார்வை