நீரிலும் நிலத்திலும் பயணிக்கும் சீனாவின் அதிவேக போர் வாகனம்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

நீரிலும், நிலத்திலும் பயணிக்கும் உலகின் அதிவேக போர் வாகனத்தை சீனா உருவாக்கி வருகிறது. 
அலைகளற்ற நீரில் மணிக்கு 50 கி.மீ. வேகத்தில் பயணிக்கும் இந்த வாகனத்தை சீனா சமீபத்தில் சோதித்துப் பார்த்தது. ராணுவத்துக்கு வாகனங்கள் தயாரித்து அளிக்கும் வடக்கு சீனா வாகன தயாரிப்பு நிறுவனம் (AFV) இந்த வாகனத்தை வடிவமைத்துள்ளது. சோதனை முயற்சியில் உள்ள இந்த வாகனம் ஆயுதங்களை சுமந்து கொண்டு 19 முதல் 28 கி.மீ. வேகத்தில் நீரில் பயணித்து அசத்தியுள்ளது. நீரைக் கிழித்துக் கொண்டு செல்லும் இந்த வாகனத்தின் முகப்பு ஆங்கில எழுத்தான ’வி’ (V) வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த வாகனம் வெடிகுண்டு தாக்குதலில் சேதமடையாத வகையில் உறுதியான உலோகங்களால் கட்டமைக்கப்பட்டுள்ளது. இலகுரக போர் வாகனமான இது, 5.5 டன் (ஆயுதங்கள் இல்லாமல்) மட்டுமே எடை கொண்டது. உலக அளவில் பல வாகனங்கள் இந்த வகையில் இருந்தாலும், அவை பெரும்பாலும் நீரில் மிகமெதுவாகவே பயணிக்கும். அமெரிக்க கடற்படையில் உள்ள நீரிலும், நிலத்திலும் செல்லும் போர் வாகனம் நீரில் மணிக்கு 9 கி.மீ. வேகத்தில் மட்டுமே பயணிக்கும். ஆனால் மணிக்கு 50 கிலோ மீட்டர் வேகத்தில் பயணிக்கும் சீன வாகனம் நீரில் மூழ்காமல் இருக்கப் பயன்படுத்தப்பட்ட தொழில்நுட்பத்தினை அந்நாட்டு அரசு ரகசியமாக வைத்துள்ளது. 
 


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement