கொரோனா அச்சம்: காவல்துறைக்கு தகவல் கொடுத்தவருக்கு சரமாரி உதை !

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

 


Advertisement

ராசிபுரம் அருகே வெளிமாநிலத்தவர்கள் தங்கி இருப்பதை காவல் கட்டுபாட்டு அறைக்கு தகவல் தெரிவித்த உலகநாதன் என்பவர் காவலர்களால் கண்மூடித்தனமாக தாக்கப்பட்டுள்ளார்.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த ஆண்டகளூர்கேட் பகுதியை சேர்ந்தவர் உலகநாதன் (67). இவர் சித்த மருத்துவ சங்கத்தின் மாநில தலைவராக இருந்து வருகிறார். தற்போது இவர் சைக்கிள் ஸ்டாண்டு நடத்தி வருகிறார். இந்நிலையில் இவர் வீட்டின் அருகில் ஆந்திராமாநிலத்தை சேர்ந்த 10 பேர் பிளாஸ்டிக் சேர் விற்பனை செய்வதற்காக தங்கியுள்ளனர். ஆனால் அவர்கள் சுகாதாரம் இல்லாமால் இருந்ததாக சொல்லப்படுகிறது.


Advertisement

image

வரும் ஏப்.3ஆம் தேதி ரேஷன் கடைகள் வழக்கம் போல் செயல்படும்

இதனையடுத்து உலகநாதன் என்பவர் கொரோனா குறித்த அச்சத்தால் காவல் கட்டுபாட்டு அறைக்கு இந்தத் தகவலை தெரிவித்துள்ளார். தகவலை கேட்டு சிறிது நேரத்தில் சம்பவ இடத்திற்கு வந்த காவலர்கள், எதற்காக கட்டுப்பாட்டு அறைக்கு அழைப்பு விடுத்தாய் என்று கூறி உலகநாதனை கண்மூடித்தனமாக தாக்கியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த உலகநாதனுக்கு கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதனையடுத்து அவர் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


Advertisement

சமூகவலைதளத்தில் அவதூறு: இன்போசிஸ் ஊழியர் கைது !

image

இது குறித்து மாவட்ட கண்காணிப்பாளர் அரளரசுவிடம் கேட்டபோது “ சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் உரிய விசாரணை மேற்கொண்டு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்" என தெரிவித்தார்.

 

 

loading...

Advertisement

Advertisement

Advertisement