JUST IN

“அரசு பரிந்துரைக்கும் காலம் வரை தனிமையில் இருப்போம்” - ரஜினிகாந்த் விளக்கம்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

தனது வீடியோ ட்விட்டர் பக்கத்திலிருந்து நீக்கப்பட்டது குறித்து ரஜினிகாந்த் விளக்கம் அளித்துள்ளார்.

கொரோனா தடுப்பு முயற்சியின் ஒரு பகுதியாக நாளை நாடு முழுவதும் சுய ஊரடங்கை கடைப்பிடிக்குமாறு பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். ஆகவே நாளை நாடு முழுவதும் பேருந்துகள், ரயில் சேவைகள் என அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன. கடைகளும் அடைக்கப்படும் என அறிவித்துள்ளனர். பிரதமரின் கோரிக்கையை ஏற்று பலரும் இதற்கு ஒத்துழைப்பு வழங்கும்படி வேண்டுகோள் விடுத்து வருகின்றனர். நடிகர் கமல்ஹாசன் இது தொடர்பாக அவரது ட்விட்டர் பக்கத்தில் ஒரு வீடியோ பதிவை வெளியிட்டு விளக்கம் அளித்திருந்தார்.

image

இதனிடையே இன்று பிரதமரின் வேண்டுகோளை ஏற்று நாளை முழு சுய ஊரடங்கை கடைப்பிடிக்குமாறு நடிகர் ரஜினிகாந்த் அவரது ட்விட்டர் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில், “கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட நாடுகளில் இந்தியா இரண்டாவது கட்டத்தில் இருக்கிறது. அது மூன்றாவது கட்டத்திற்கு போய்விடக்கூடாது. ஜனங்கள் நடமாடுகின்ற இடங்களில் உள்ள கொரோனா வைரஸ் 12 இல் இருந்து 14 மணிநேரம் அது பரவாமல் இருந்தாலே அதை மூன்றாவது கட்டத்திற்குப் போகவிடாமல் தடுத்துவிடலாம். அதற்காகதான் பிரதமர் மோடி அவர்கள் 14 மணிநேர சுய ஊரடங்கு உத்தரவு கொடுத்துள்ளார்கள்” எனக் கூறியிருந்தார்.

இதனிடையே ரஜினிகாந்த் கூறிய தகவல்களில் சில பிழைகள் உள்ளதாக புகார் எழுந்தது. அதனைத் தொடர்ந்து நேற்று உடனடியாக அவரது ட்விட்டர் பக்கத்தில் நீக்கப்பட்டது. 14 மணி நேரம் வரை பரவாமல் இருந்தால் 3வது நிலையை தவிர்க்கலாம் என ரஜினி கூறியிருந்தார். இது தங்களது விதிமுறைக்கு எதிரானது எனக்கூறி ட்விட்டர் நிறுவனம் ரஜினி வீடியோவை நீக்கியது.

image

இந்நிலையில் ட்விட்டர் செயல்பாட்டை விளக்கி ரஜினி ஒரு விளக்கத்தை அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “நேற்று பதிவு செய்த காணொளியில் 12 முதல் 14 மணிநேரம் வரை மக்கள் வெளியில் நடமாடாமல் இருந்தாலே கொரோனா வைரஸ் பரவுவது தடைப்பட்டு, சூழல் மூன்றாம் நிலைக்கு செல்வது தவிர்க்கப்படலாம் என்று நான் கூறியிருந்தால், அது “இன்று மட்டும் அப்படி இருந்தாலே போதும்” என்று பரவலாகப் புரிந்து கொள்ளப்பட்டு, அதிகம் பகிரப்பட்டது. இதனால் ட்விட்டர் நிர்வாகம் அதை நீக்கியுள்ளது.

நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர அரசு பரிந்துரைக்கும் காலம் வரை இன்றைப் போலவே சுயத் தனிமைப்படுத்தலை நாம் கவனமாகப் பின்பற்றி இந்தக் கொடிய வைரஸை வீழ்த்துவதற்கான முயற்சியில் கவனத்தை செலுத்துவோம்.

image

இவ்வேளையில் என்னுடைய காணொளியின் நோக்கத்தைப் புரிந்து கொண்டு ஆதரித்து, மக்களிடம் பதிவை சரியான முறையில் கொண்டு சேர்த்த அனைவருக்கும் நன்றி” என்று கூறியுள்ளார்.

இதற்கு ட்விட்டர் இந்தியா பதிலளித்துள்ளது. அதில், COVID-19 குறித்த துல்லியமான தகவல்களைப் பரப்புவதை உறுதி செய்வதில் எங்களுடன் இணைந்ததற்கு நன்றி தலைவா எனக் கூறப்பட்டுள்ளது.

 

Advertisement: